Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கைவிரித்த அமைச்சர்: சிறப்பு காட்சி உண்டா? - திகிலில் ரசிகர்கள்

22 அக், 2019 - 14:00 IST
எழுத்தின் அளவு:
No-special-shows-to-Bigil-and-Kaithi:-Fans-in-shock

தீபாவளி பண்டிகை என்றாலே சினிமா ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான். அதிகாலையே சிறப்பு காட்சிகளில் தங்களது அபிமான ரசிகர்களின் படங்களை பார்த்துவிடுவார்கள். இந்த தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‛பிகில்' படமும், கார்த்தி நடித்துள்ள ‛கைதி' படமும் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்குமே எதிர்பார்ப்பு உள்ளது. அதிலும் விஜய்யின் பிகில் படம் ஓராண்டுக்கு பின்னர் வெளியாவதால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். ஆனால் இம்முறை இரண்டு படங்களுக்கும் சிறப்பு காட்சி அனுமதி அளிக்கவில்லை.

இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தீபாவளியை ஒட்டி எந்த படங்களுக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்கவில்லை. அதை மீறி திரையிடும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சில தியேட்டர்களில் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. அப்படி விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறப்பு காட்சி தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்று(அக்.,22) மாலை தான் சென்னை வருகிறேன். அதன்பிறகு தான் முடிவெடுக்கப்படும் என்றார்.

பல ஊர்களில் அதிகாலை காட்சிக்கு முன்பதிவு நடந்துள்ளது. மேலும் டிக்கெட்டும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒருவேளை சிறப்பு காட்சி அனுமதி அளிக்காவிட்டால் அவர்களுக்கு பணத்தை திருப்பி தருவதிலும் சிக்கல்கள் உருவாகும். இதனால் பிகில் ரசிகர்கள் திகிலில் உள்ளனர்.

அனுமதி கிடைக்கும்

தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறுகையில், பண்டிகை காலங்களில் இது போன்று சிறப்பு காட்சிகள் நடப்பது வழக்கமான ஒன்று தான். பொங்கலுக்கு கூட சிறப்பு காட்சி திரையிட்டோம். அரசாங்காத்திடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். அமைச்சரையும் இன்று(அக்.,22) மாலை சந்தித்து பேச இருக்கிறோம். நிச்சயம் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
என்னடா இது பிகிலுக்கு வந்த சோதனை: பூ வியாபாரிகளும் எதிராக கிளம்பினர்என்னடா இது பிகிலுக்கு வந்த சோதனை: பூ ... டில்லிக்கு செல்லும் விஜய் 64 படக்குழு டில்லிக்கு செல்லும் விஜய் 64 படக்குழு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23 அக், 2019 - 07:40 Report Abuse
ஆரூர் ரங் அதிகாலைக் காட்சி ஆயிரம் இரண்டாயிரத்துக்கு பிளாக்கில் டிக்கெட் விற்று காசாக நடத்துறாங்களாம் இதுக்கு என்ன அனுமதி வேண்டிக்கிடக்கு? முன்பு தியேட்டர்காரன் மட்டும் சம்பாதிச்சான்.இப்போ தயாரிப்பாளருக்கும் கட்டிங் போவுது .அதான் வித்தியாசம் திராவிஷன் லஞ்சம் கேக்கலாமா இருப்பான்?
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
22 அக், 2019 - 21:11 Report Abuse
தமிழ்வேள் திருவிழா தினங்களில் அதிகாலைப்பொழுதில் வீட்டில் தாங்காமல் குடும்பத்தோடு நேரத்தை செலவிடாமல் காலை மூன்று மணி காட்ச்சிக்காக இரவு முழுவதும் தியேட்டர் வாசலில் தேவுடுகாக்கும் கேவலத்தை முடிவுக்கு கொண்டுவருவது சிறப்பு காட்ச்சிகள் தடைசெய்யப்படவேண்டும் ....இந்த் ரசிக குஞ்சுகள் அப்படியாவது வீடு தங்குகிறார்களா பார்ப்போம் ....கூத்தாடிக்கு காவடி எடுக்கும் நேரத்தில் நாலு முதியோர் இல்லங்கள் அநாதை இல்லங்களில் சேவை செய்தாலாவது வாழ்வில் நல்லது நடக்கும் நடிகனின் பின்னால் சென்று என்ன சாதித்தார்கள் இந்த ரசிக கோமாளிகள் ??
Rate this:
K.P SARATHI - chennai,இந்தியா
22 அக், 2019 - 20:06 Report Abuse
K.P  SARATHI நடுத்தெருவில் வித்தைகாட்டுபவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
22 அக், 2019 - 19:02 Report Abuse
Vasudevan Srinivasan முக்கிய முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படுவது வழக்கம்தான் அதாவது பொதுவான பகல் காட்சிக்கு முன்பாக ஒரு காட்சி திரையிடப்படும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிகாலை காட்சிகள் திரையிடப்பவடுகிறது இது இளைஞர்களை கெடுக்கும் வேலை குடும்பட்தில் நடக்கும் பூஜை மற்றும் கொண்டாட்டங்களை விட்டுவிட்டு நடிகர்களுக்கு காவடி தூக்க செய்யும் அதிகாலை காட்சி.. இது தவிர்க்கப்படுவதே நல்லது
Rate this:
kumzi - trichy,இந்தியா
22 அக், 2019 - 18:50 Report Abuse
kumzi அதுதா தமிழ்ராக்கர்ஸ் இருக்கே 24 மணித்தியாலமும் பாக்கலாமே
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in