18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
ராய்லட்சுமி நடித்துள்ள படம் சிண்டரல்லா. இதில் சாக்ஷி அகர்வால் வில்லியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர ரோபோ சங்கர், கல்லூரி வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். காஞ்சனா 2 படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் லட்சுமி என்டிஆர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா உதவியாளர் வினோ வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறியதாவது: இது ஒரு பேய்ப் படம் தான். ஆனால் பேய்ப் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து பார்முலாவில் இருந்து விலகி அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி இப்படத்தில் ஏற்றுள்ள வேடம் அவருக்கு உள்ள கிளாமர் கேர்ள் இமேஜை உடைக்கும். அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும். சாக்ஷி அகர்வால் ஏற்றுள்ள வில்லி பாத்திரம் திரையில் தீப்பிடிக்க வைக்கும்படியான பரபரப்புடன் இருக்கும்.
சிண்ட்ரெல்லா என்கிற பெயர் குழந்தைகளிடம் மிகவும் பரிச்சயமானது. இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பிடிக்கும் வகையில் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் படம் பார்க்கும் ரசிகர்கள், நட்சத்திரங்களைப் பார்ப்பதில்லை. கதையையும் கதை சொல்லல் முறையையும்தான் பார்க்கிறார்கள். அந்த வகையில் பொழுது போக்கிற்கு நம்பிக்கை தரும் படமாக உருவாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள் என்றார்.