நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வருபவர் வித்யா பாலன். அவர் சமீபத்தில், நடிகர் அஜித் நடிக்க, இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க, போனிக் கபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் மீதும் ஆர்வமாக ட்விட்டர் மூலம் சில செய்திகளை வெளியிடுகிறார். நடிகர் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படம் குறித்து, அவர் தன்னுடைய கருத்தை வீடியோ வெளியிட்டு கூறியிருக்கிறார்.
அதில் வித்யா பாலன் கூறியிருப்பதாவது:
நடிகர் கமல் நடிப்பிலும், இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்திலும் உருவான மைக்கேல் மதன காமராஜன் படத்தை, என்னுடைய கணவர் சித்தார்த்துடன் இணைந்து மீண்டும் பார்த்தேன். மிக அற்புதமான நடிப்பை நடிகர் கமல் வெளிப்படுத்தி இருப்பார். நான்கு வேடங்களில், நடிகர் கமலின் நடிப்பு அற்புதம். குறிப்பாக, நான்கு கமலில் ஒரு கமல் தான் என்னுடைய ஆல் டைம் பேவரைட். ஊர்வசி த்ருப்பு த்ருப்பு என்று சொல்வாரே, அந்த கமல் ஆஹா அற்புதம்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.