தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் அதிகாலை காட்சிகள் ஏற்படுத்திய பரபரப்பு போய், நள்ளிரவு காட்சிகளும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வருடப் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்களில் 'விஸ்வாசம்' படத்திற்கு நள்ளிரவு 1 மணி காட்சி, 'பேட்ட' படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன.
இப்போது தீபாவளிக்கு 'பிகில், கைதி' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இவற்றில் 'பிகில்' படத்தை அதிகாலை காட்சிக்கு முன்பாக நள்ளிரவு காட்சிகள் வைத்தாலும் பார்க்க விஜய் ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், சமீபத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகளால் 'பிகில்' படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகளை அரசு அனுமதிக்குமா என்பது தெரியவில்லை. திரையுலகில் விசாரித்தால் இப்போதைக்கு காலை 8 மணி காட்சி மட்டும் இருக்கும் என்கிறார்கள்.
அடுத்த வாரம்தான் நள்ளிரவு மற்றும் அதிகாலை காட்சிகள் இருக்குமா இல்லையா என்பது தெரிய வருமாம்.