‛மயோன் 2' உருவாகிறது | யானை படம் : பிரியா பவானி சங்கர் நம்பிக்கை | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி | திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன் | மதுரைக்கார இளைஞனாக மாறும் ஆர்யா | கமலுக்கு கோல்டன் விசா | பிரித்விராஜ் ஒரு கேரள கமல் : விவேக் ஓபராய் புகழாரம் | பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை நாடும் கேரள அரசு | இயக்குனர் சங்கத்திற்காக ஒன்றிணையும் ஜீத்து ஜோசப் - பிரித்விராஜ் | மோகன்லாலுக்கு வில்லனாக மாறும் ஹரீஷ் பெராடி |
சிரஞ்சீவி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சுதீப், தமன்னா மற்றும் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப்பச்சன், அனுஷ்கா ஆகியோர் நடித்து வெளிவந்த படம் 'சைரா'. அக்டோபர் 2ம் தேதி வெளிவந்த இந்தப் படம் தெலுங்கு மாநிலங்களான தெலங்கானா, ஆந்திரா தவிர மற்ற இடங்களில் தோல்வி அடைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
200 கோடி அளவிற்கு வியாபாரம் நடந்த இந்தப் படம் 225 கோடி வரைதான் இதுவரையிலும் வசூலித்துள்ளதாம். தெலுங்கு மாநிலங்களில் மட்டுமே லாபத்தைக் கொடுத்துள்ளது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, வட இந்திய மாநிலங்களில் இப்படத்தின் தோல்வி எதிர்பார்க்காத ஒன்று என்கிறார்கள்.
தெலுங்குப் படங்களுக்கு நிஜாம் ஏரியாவிற்கு அடுத்து கர்நாடகா தான் பெரிய மார்க்கெட். 'சாஹோ, சைரா' ஆகிய படங்களின் தோல்வியால் இனி கர்நாடகாவில் தெலுங்குப் படங்களின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்கிறார்கள்.
இவ்வளவு நட்சத்திரங்கள் நடித்திருந்தும் 'பாகுபலி' அளவிற்கு படத்தை பிரமோஷன் செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள். இப்படத்தின் எந்த ஒரு பிரமோஷன் நிகழ்விலும் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.