Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அந்த பதில் பிடித்தது: நித்யா மேனன்

19 அக், 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
I-love-that-answer-says-Nithyamenon

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பலரும் படமாக்கி வருகின்றனர். நடிகை கங்கனா ரணாவத், ஜெயலலிதாவாக நடிக்க தலைவி என்ற படம் உருவாகி வருகிறது. இயக்குநர் கவுதம், வெப் சீரிஸ் ஒன்றை எடுத்து வருகிறார். அதில், ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

அதேபோல, இயக்குநர் ப்ரியதர்ஷினி, தி அயர்ன் லேடி என்ற பெயரில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை நித்யா மேனன், ஜெயலலிதாவாக நடிக்கிறார்.

நித்யா மேனன் கூறியிருப்பதாவது: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, இத்தனை பேர் படங்களாக எடுக்கின்றனரே என எனக்கு குழப்பமாக இருந்தது. இதை ப்ரியதர்ஷினியிடம் கேட்டே விட்டேன். அந்த கேள்வியை அவர் எதிர்பார்த்திருப்பார் போல. கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தார்.

எல்லோரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க வேண்டும் என நினைக்கின்றனர். அதில் தவறேதும் இல்லை. எல்லோரும் படம் எடுக்கட்டும்; நாமும் எடுப்போம். எந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என மக்கள் முடிவெடுக்கட்டும். நன்றாக எடுக்கப்படும் படம் வெற்றியடையப் போகிறது. எல்லா படமும் நன்றாக இருந்தால், அது மக்களுக்கு பரிசாக இருந்துவிட்டுப் போகட்டும் என்றார். அவர் சொன்ன அந்த பதில் எனக்குப் பிடித்திருந்தது. வேறு எந்தக் கேள்வியும் கேட்காமல், படத்தில் நடித்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நாவலைப் படிக்காமலேயே படத்தில் நடித்தேன்: மஞ்சு வாரியர்நாவலைப் படிக்காமலேயே படத்தில் ... மனச்சோர்வு நோயில் இருந்து எப்படி மீண்டேன்: அக்ஷரா கவுடா மனச்சோர்வு நோயில் இருந்து எப்படி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in