Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நாவலைப் படிக்காமலேயே படத்தில் நடித்தேன்: மஞ்சு வாரியர்

19 அக், 2019 - 13:35 IST
எழுத்தின் அளவு:
Manju-warrier-about-acted-in-Asuran

நடிகர் தனுஷ் நடித்திருக்கும் அசுரன் படம், எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டப் படம். இந்த நாவலை முழுமையாக படித்து முடித்த இயக்குநர் வெற்றி மாறன், நாவலை அப்படியே உள்வாங்கி தன்னுடைய பாணியில் திரைக்கதை அமைத்து அதைப் படமாக்கி இருக்கிறார்.

படத்தில் நடிகர் தனுஷும், மலையாள நடிகை மஞ்சு வாரியாரும் நடிக்க முடிவாகி, இருவரும் படபிடிப்புக்கு வந்தனர். அப்போது, மஞ்சுவாரியர், படத்தின் கதை குறித்து வெற்றிமாறனிடம் கேட்டிருக்கிறார். அது குறித்து, படம் வெற்றியடைந்ததும், நடிகை மஞ்சு வாரியார் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: நடிகர் தனுஷ் மிகச் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நான் அறிவேன். இருந்தாலும், அசுரன் படத்தில் அவர் அசுரத்தனமாக நடித்து, தன்னை சிறந்த நடிகராக உலகுக்கே அடையாளம் காட்டி இருக்கிறார். படத்தில் நடிக்க வேண்டும் என, இயக்குநர் வெற்றி மாறன் என்னை அணுகிய போது, ஒரு வரி கதைதான் சொன்னார். அவரது திறமையை நம்பி நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படபிடிப்புக்கு வந்த போது, படத்தின் முழுக்கதையும் பூமணியின் வெக்கை நாவலிலிருந்து எடுக்கப்பட்டது தான் என்பதை அறிந்து, வெக்கை நாவலை படிக்க ஆவல் கொண்டேன். அதை நானும், நடிகர் தனுஷும், வெற்றி மாறனிடம் கேட்டோம். இந்த சூழலில் நீங்கள் நாவலையெல்லாம் படிக்க வேண்டியதில்லை. நான் சொல்வது போல மட்டும் படத்தில் நடித்தால் போதும். படம் எடுத்து முடிக்கப்பட்டதும், நீங்களே, இதுதான் மொத்த நாவலின் கதை என உணருவீர்கள் என்றார். அதேபோல, நாவலைப் படிக்காமலேயே படத்தில் நடித்து முடித்தோம். பின், நாவலைப் பற்றி முழுமையாகக் கேட்டபோது, படம் தான் நாவல் என உணர்ந்தேன்.

இவ்வாறு மஞ்சு வாரியர் கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நெற்றிக்கண் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் நயன்தாராநெற்றிக்கண் இரண்டாம்கட்ட ... அந்த பதில் பிடித்தது: நித்யா மேனன் அந்த பதில் பிடித்தது: நித்யா மேனன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in