Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் படம் வேண்டாம்; வெளியிட மறுக்கும் தியேட்டர் நிர்வாகம்

17 அக், 2019 - 17:10 IST
எழுத்தின் அளவு:
theatre-owners-refused-to-release-vijay-movie

தமிழகம் முழுவதும் வரும் தீபாவளிக்கு பிகில் படம் ரிலீசாகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான தியேட்டர்கள், பிகில் படத்தை வெளியிட்டு, வசூலை அள்ளி, அதன் மூலம் நிறைய சம்பாதித்துக் கொள்ளலாம் என திட்டமிட்டு, படத்தை வெளியிடும் மும்முரத்தில் இருக்கின்றனர்.

விநியோகஸ்தர்களும், தியேட்டர்களுக்கு படத்தைப் பேசி ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கின்றனர். கூடுதல் திரையரங்குகளில் பிகில் படத்தை வெளியிடமும் அவர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.


விஜய்யின், பிகில் படத்துடன், தீபாவளிக்கு, நடிகர் கார்த்தியின் கைதி படமும் ரிலீஸாகிறது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள், மத்தியில் இரு படங்களில் ஏதாவது ஒன்றை வெளியிட்டுக் கொள்ளலாம் என திட்டமிடுகின்றனர்.


இப்படி, பிகில் அல்லது கைதி படங்களில் ஒன்றை தங்கள் தியேட்டரில் வெளியிடலாம் என்ற திட்டத்தோடு, தியேட்டர் உரிமையாளர்கள், இரு பட விநியோகஸ்தர்களிடமும் வியாபாரம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.


ஆனால் எங்கள் தியேட்டரில் பிகில் திரைப்படத்தை வெளியிட மாட்டோம் என விநியோகஸ்தர்களிடம் அடித்துச் சொல்லி விட்டு, நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் கைதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறது திருச்சி ரம்பா திரையரங்கம்.


திருச்சி மையப் பகுதியில் இருக்கும் ரம்பா தியேட்டரில், பிகில் படத்தை வெளியிடாமல் ஒதுங்குவது ஏன் என கேட்டபோது, அதன் உரிமையாளர்கள் கூறியதாவது:


திருச்சி நகரில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில், பிகில் படம் வெளியாகிறது. அதனால், தியேட்டர்களோடு போட்டி போட்டு, ஒரே படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர் நிர்வாகம் விரும்பவில்லை. அதனால், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகும் கைதி படத்தை ரம்பா தியேட்டரில் வெளியிடுகிறோம்.


நடிகர் விஜய் படமோ, அஜித் படமோ ரிலீசானால், அவர்களுடைமேலும் அஜித், விஜய் படங்கள் என்றாலே அவருடைய ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், அடாவடித்தனம் தாங்க முடியவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. தியேட்டரில் உள்ள இருக்கைகளை சேதப்படுத்தி விடுகின்றனர். இவற்றை மறு நிர்மாணம் செய்ய நிர்வாகம் நிறைய செலவு செய்ய வேண்டியதாகிறது.


இதனாலேயே, அஜித், விஜய் போன்ற பிரபல நடிகர்களின் படங்களை திரையுடுவதைத் தவிர்க்கிறோம். இவ்வாறு தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர்.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
3 மொழிகளில் பெரிய படங்களில் த்ரிஷா3 மொழிகளில் பெரிய படங்களில் த்ரிஷா இணையத்தில் வைரலாகும் பூஜை: அஜித் படக் குழு டென்ஷன் இணையத்தில் வைரலாகும் பூஜை: அஜித் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

meenakshisundaram - bangalore,இந்தியா
20 அக், 2019 - 05:15 Report Abuse
meenakshisundaram Vijay ரசிகர்களே ரொம்ப அலப்பறை செய்பவங்க விஜய்யின் அப்பா போல .அஜித் ரசிகர்களோ அப்படி இல்லை .வெறுமனே கொண்டாடுவார்கள்.அவ்வளவே .
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
18 அக், 2019 - 18:59 Report Abuse
madhavan rajan very good decision. many theaters should follow this. instead of earning more and sping more for the damage, you can earn less and keep the earning safely without sping for unnecessary damages. Such protests will teach lessons to the fans for proper behaviour.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 அக், 2019 - 17:29 Report Abuse
J.V. Iyer ரசிகர்கள் திருந்துவார்களா?
Rate this:
Believe in one and only God - chennai,இந்தியா
18 அக், 2019 - 09:46 Report Abuse
Believe in one and only God விஜயை பத்தி அவரது ரசிகர்கள் புகழ்வது இந்த தியேட்டர் -காரருக்கு பிடிக்கவில்லை. அது தான் உண்மை.
Rate this:
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
18 அக், 2019 - 08:03 Report Abuse
Rangiem N Annamalai முதலில் காந்தி படம் போட்டவர்கள் .இப்படி முடிவு எடுத்ததில் ஆச்சர்யமில்லை.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in