Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு படத்தை கைப்பற்றிய யோகிபாபு

17 அக், 2019 - 14:09 IST
எழுத்தின் அளவு:
yogi-babu-captures-vadivelu-movie-chance

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்த வடிவேலு இரண்டு வேடங்களில் நாயகனாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. சிம்புதேவன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. பின்னர் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையையும் வடிவேலுவிடம் சொல்லி ஓகே பண்ணி படப்பிடிப்பை தொடங்கினார் சிம்புதேவன்.

ஆனால் படப்பிடிப்பு ஒரு வாரம் நடந்த நிலையில், கதை மற்றும் பாடல்களில் சில திருத்தங்களை செய்யுமாறு சிம்புதேவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் வடிவேலு. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் படமே கிடப்பில் போடப்பட்டது.


அந்த நேரத்தில்தான் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பேய் மாமா என்றொரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருந்தார் வடிவேலு. ஆனால், இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து அவர் விலகியதை அடுத்து அவரிடம் நஷ்டஈடு கேட்டு தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது அந்த படத்தின் தயாரிப்பாளரான டைரக்டர் ஷங்கர் புகார் அளித்திருந்ததால், பேய் மாமா படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது.


இந்தநிலையில், பேய் மாமா படத்தில் வடிவேலு நடிக்கயிருந்த கதையின் நாயகன் வேடத்தில் நடிக்க யோகிபாபு கமிட்டாகியுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு குமுளியில் நடைபெற்று வருகிறது. யோகிபாபுவிற்கு ஜோடியாக ரேஷ்மா நடிக்கும் இந்த படத்தில் இமான் அண்ணாச்சி, ரமேஷ்கண்ணா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
24 மணி நேரத்தில் நடக்கும் 'எதிர் வினையாற்று'24 மணி நேரத்தில் நடக்கும் 'எதிர் ... விக்ரம்-58 படத்தில் இணைந்த கேஜிஎப் கன்னட பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரம்-58 படத்தில் இணைந்த கேஜிஎப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
18 அக், 2019 - 08:30 Report Abuse
A.George Alphonse வடிவேலு இதுபோன்ற தேவையற்ற விஷயங்களால் தனது ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆப்பும்,சூனியமும் வைத்துக்கொண்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in