Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது: இர்பான் பதான்

16 அக், 2019 - 16:26 IST
எழுத்தின் அளவு:
Irfan-pathan-about-acting-in-Vikram-film

நடிகர் விக்ரமின் 58வது படத்தை இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கவிருக்கிறார். ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் விக்ரமோடு முக்கியமான கேரக்டரில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கவிருக்கிறார்.

இது தொடர்பாக, அவர் கூறியிருப்பதாவது: நான் ஏற்கனவே டி.வி., ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்றிருக்கிறேன். அநேகமாக அதைப் பார்த்து விட்டுத்தான், என்னை நடிக்க அழைக்கலாம் என, நண்பர் அஜய் ஞானமுத்து முடிவெடுத்திருக்க வேண்டும். அவர், நடிகர் விக்ரமை வைத்து எடுக்கவிருக்கும் புதிய படத்தில் என்னை நடிக்க வைப்பதற்காக சம்மதம் கேட்க என்னை சந்தித்தார்.

உங்கள் படத்தில் என்னை ஏன் நடிக்க வைக்க முயற்சிக்கிறீர்கள்? என கேட்டேன். உடனே, படத்தின் கதையை என்னிடம் சொன்னார். படத்தில் எனக்கான கேரக்டர் குறித்தும் சொல்லி, அதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். என் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை பொய்யாக்கக் கூடாது என்பதால், உடனே நடிக்க சம்மதித்து விட்டேன். நடிகர் விக்ரம், மிகப் பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது பெருமை.

நான் இயல்பில் நடிகர் இல்லை என்பதால், நடிப்பு எனக்கு புதிது. அதனால், படமாக்கப்படும்போது, காட்சிப் பதிவுகள், இரு முறை எடுக்கப்பட வேண்டியிருக்கலாம். இதையெல்லாம், இயக்குநர் அஜய்யிடம் நான் சொன்னேன். அது பெரிய விஷயமில்லை என்று சொல்லி விட்டார் என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் நயன்தாராராணா படம்: கீர்த்தி சுரேஷிற்கு பதில் ... கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியில் மிரட்டும் ஐஸ்வர்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in