Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' - வியாபாரம் எவ்வளவு தாண்டும்?

15 அக், 2019 - 19:03 IST
எழுத்தின் அளவு:
How-much-Bigil-Business?

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் பட்ஜெட் 180 கோடி என தயாரிப்பு தரப்பிலேயே அறிவித்துள்ளார்கள். பட்ஜெட்டே அவ்வளவு என்றால் படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தாண்டித்தான் விற்க முடியும் என்பது சாதாரண கணக்கு. அதற்கு மேல் 50 கோடியாவது வசூலித்து 250 கோடி வந்தால் தான் படம் லாபத்தைத் தரும் என்று கோலிவுட்டில் ஒரு கணக்கு சொல்கிறார்கள்.

'பிகில்' படம் வியாபாரம் எவ்வளவிற்கு நடந்திருக்கும், எத்தனையைக் கோடியைத் தாண்டும் என கோலிவுட்டில் விசாரித்த போது ஒரு தகவலைச் சொன்னார்கள். இது அதிகாரப்பூர்வமற்ற ஒரு கணக்கு தான் இருந்தாலும் சில பல கோடிகள் மட்டுமே அதில் கூடும் அல்லது குறையும்.

பிகில் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமை 75 கோடி, கேரளா, கர்நாடகா உரிமை 17 கோடி, தெலுங்கு உரிமை 8 கோடி, வெளிநாட்டு உரிமை 30 கோடி, தமிழ் சாட்டிலைட் உரிமை 30 கோடி, மற்ற மொழி சாட்டிலைட் உரிமைகள் 10 கோடி, ஹிந்தி டப்பிங் மற்றும் சாட்டிலைட் உரிமை 20 கோடி, இசை உரிமை 3 கோடி, டிஜிட்டல் மற்றும் இதர உரிமைகள் 30 கோடி என 223 கோடி வரை வியாபாரம் ஆகியிருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இவற்றில் சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவை நேரடியாக தயாரிப்பாளருக்கே போய்ச் சேரும். வினியோக உரிமை அவுட்ரேட் அடிப்படையில் விற்கப்பட்டிருந்தால் அவையும் நேரடியாக தயாரிப்பாளருக்கேதான் போய்ச் சேரும்.

விஜய் போன்ற பெரிய நடிகரை வைத்து படம் தயாரிக்கும் போது தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரிஸ்க் அதிகமிருக்க வாய்ப்பில்லை. படம் நன்றாக இருந்தால் ஜாக்பாட் தான்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
'அசுரன்' - 100 கோடி கணக்கு என்ன?'அசுரன்' - 100 கோடி கணக்கு என்ன? நயன்தாராவிடம் இருந்து தமன்னாவுக்கு மாறும் படங்கள்! நயன்தாராவிடம் இருந்து தமன்னாவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 அக், 2019 - 17:01 Report Abuse
Vasudevan Srinivasan இந்த கணக்கு உங்களுக்கு மட்டும் ரகசியமாய் சொன்னது யாருங்கோ..? அட போங்க சார் இதெல்லாம் ஒரு பில்ட் அப் பம்மாத்து... வருமானத்தை பற்றி எவரும் இப்படி வெளிப்படையாக சொல்வதற்கு வாய்ப்பே இல்லை
Rate this:
GURU - DHINDUKAL,இந்தோனேசியா
16 அக், 2019 - 12:42 Report Abuse
GURU ஒரு ரூபாய்க்கு தேறாது விஜய் படம்
Rate this:
16 அக், 2019 - 09:45 Report Abuse
என் மேல கை வெச்சா காலி இவன் எல்லாம் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை.
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
16 அக், 2019 - 06:36 Report Abuse
கதிரழகன், SSLC அஞ்சு ரூபாய்க்கு வைத்தியம் பாத்தான் ஒரு ஹீரோ ன்னு கதை, அந்த வேசம் கட்ட இந்த ஜேம்ஸுக்கு அஞ்சு கோடி சம்பளம். போங்கடா போக்கத்த பயலுகளா. நாடு விளங்கினா மாதிரித்தான்.
Rate this:
kumzi - trichy,இந்தியா
15 அக், 2019 - 22:26 Report Abuse
kumzi தமிழ்ராக்கர்ஸ்க்கு முதல்நாள் லாபம் நூறு கோடி
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in