விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
நடிகரும், இயக்குநருமான சேரன், ‛ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் இருக்கும் பிரசாத் ஸ்டுடியோவில் நடந்தது. பின், முக்கியமானவர்களுக்கு மட்டும் படத்தையும் திரையிட்டு காட்டினர்.
இந்த நிகழ்ச்சிக்கு, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பதினாரு போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷனுக்கும் அழைப்பு விடுத்திருந்தார் சேரன். அதையடுத்து, தர்ஷனும், ஷனம் ஷெட்டியும் ஜோடியாக இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வந்ததோடு, சிறப்பு திரையிடலையும் பார்த்து ரசித்து, சேரனை பாராட்டிச் சென்றனர்.
இது தொடர்பாக, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் தர்ஷன், ஷனம் ஷெட்டியுடன் சேரனின் ராஜாவுக்கு செக் படத்தை பார்த்ததையும், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதையும் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். சேரனுக்கு தங்களுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சேரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என்னுடைய அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தந்த தர்ஷன், ஷனம் ஷெட்டி இருவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜாவுக்கு செக் படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் சேரனுடன் இர்பான், சிருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். விரைவில் படம் ரிலீசாக இருக்கிறது.