Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டொவினோ தாமஸ் படத்தில் ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குனர்

15 அக், 2019 - 17:41 IST
எழுத்தின் அளவு:
Hollywood-stunt-director-for-Tovino-thomas-film

கதையம்சம் உள்ள படங்களாக தேர்ந்தெடுத்து தன்னை ஒரு நல்ல நடிகர் என நிரூபித்த மலையாள நடிகர் டொவினோ தாமஸ், தற்போது ஆக்சன் படங்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார். அந்தவகையில் கடந்த மாதம் அவரது நடிப்பில் வெளியான கல்கி என்கிற அதிரடி போலீஸ் படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது மின்னல் முரளி என்கிற படத்தில் நடித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ மற்றும் வாமிகா நடித்த குத்து சண்டையை மையப்படுத்தி உருவாகி இருந்த 'கோதா' என்கிற படத்தை இயக்கிய பசில் ஜோசப் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். வழக்கமான படங்களின் சண்டைக் காட்சிகள் போல மின்னல் முரளி படத்தில் இருக்கக் கூடாது என்பதற்காகவே பிரபல ஹாலிவுட் சண்டை பயிற்சியாளரான வலாட் ரிம்பர்க் என்பவரை அழைத்து வந்து இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருகிறார்..

பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இவர், இந்தியாவில் பாகுபலி-2, சுல்தான், சமீபத்தில் வெளியான பயில்வான் உள்ளிட்ட படங்களுக்கு சண்டைக்காட்சிகளை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரங்கஸ்தலம் இயக்குனருக்கு லூசிபர் ரீமேக்கை இயக்கும் வாய்ப்புரங்கஸ்தலம் இயக்குனருக்கு லூசிபர் ... மகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் தவிர்க்கப்படுமா..? மகேஷ்பாபு - அல்லு அர்ஜுன் மோதல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in