குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 168வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ரஜினி இமயமலையில் இருந்து திரும்பியதும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதால் அதற்கு முன்பே இந்த படத்தில் நடித்து முடித்து விட திட்டமிட்டுள்ளார்.
அதனால் தான் தர்பாருக்கு பிறகு இடைவெளி கொடுக்காமல் உடனடியாக அடுத்த படத்தை தொடங்குகிறார் ரஜினி. மேலும், கிராமத்து செண்டிமென்ட் கதையில் இந்த படம் உருவாகும் நிலையில், சந்திரமுகிக்குப் பிறகு ஜோதிகா இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரைத் தொடர்ந்து கீர்த்தி சுரேசும் இன்னொரு நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.