‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
பசங்க, கோலி சோடா, காக்கா முட்டை, சாட்டை, அப்பா பட வரிசையில் பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் பிழை.
காக்கா முட்டை படத்தில் சின்ன காக்கா முட்டையாக நடித்து ரசிகர்களை ஈர்த்த ரமேஷ், அப்பா படத்தில் நடித்த நசத், கோகுல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறுவர்களின் அப்பாவாக சார்லி, மைம் கோபி, ஜார்ஜ் நடிக்கின்றனர். தர்ஷினி, கல்லூரி வினோத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டர்னிங் பாய்ண்ட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ஆர். தாமோதரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பைசல் இசையமைத்துள்ளார். பாக்கி ஒளிப்பதிவை கவனிக்க, ராம் கோபி படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். படம் பற்றி இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா கூறியதாவது:
பள்ளிக்கூடம் தொடர்பான கதை. அத்துடன், அப்பா - மகனுக்கு இடையில் நடக்கும் பாச போராட்டத்தையும் வலியுறுத்தும். பள்ளிக்கு செல்வது பிடிக்காமல் ஊர் சுற்றும் மாணவர்களான ரமேஷ், நசத், கோகுல் ஆகியோர் தங்கள் அப்பாக்களின் கண்டிப்பு பிடிக்காமல் ஊரை விட்டு ஓட, அவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் தான் படம். பெற்றோர்களும், ஆசிரியர்களும் பிள்ளைகளை அடித்து வளர்க்க வேண்டும் என்று ஆணித்தரமாக சொல்கிற படம். அதே நேரத்தில் மிக கடுமையாக நடந்து கொண்டால் அதுவும் ஆபத்தானது என்பதையும் சொல்கிறோம். இதன் ஊடாக ஒரு காதலையும் அந்த காதலால் வரும் ஆணவக் கொலையையும் சொல்கிறோம். என்றார்.