Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழில் மம்முட்டி, நாகார்ஜுனா படங்கள்: 18ந் தேதி வெளிவருகிறது

15 அக், 2019 - 10:52 IST
எழுத்தின் அளவு:
Mammootty---Nagarjuna-film-releasing-in-tamil

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் தேவ்தாஸ். நாகார்ஜுனா, நானி, ராஷ்மிகா மந்தனா, அகான்ஷா சிங், சரத்குமார் நடித்திருந்தார்கள். ஸ்ரீராம் ஆதித்யா இயக்கி இருந்தார். மணிசர்மா இசை அமைத்திருந்தார். சாம்ஷத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

நானி ஒரு டாக்டர். சிறிய அளவில் கிளினிக் நடத்துகிறார். ஒரு நாள் ரத்த காயங்களுடன் அந்த கிளினிக்கிற்கு வந்து சேர்கிறார் நாகார்ஜுனா .அவருக்கு நானி சிகிச்சை அளிக்கிறார். இருவரும் நல்ல நண்பர்கள் ஆகிறார்கள். பிறகுதான் தெரிகிறது நாகார்ஜுனா பெரிய டான் என்று. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வெளிவந்த மலையாளப் படம் மதுர ராஜா. வைசாக் இயக்கிய இந்தப் படத்தில் மம்முட்டி, ஜெய், ஜெகபதி பாபு, சித்திக், ஆர்.கே.சுரேஷ், பார்வதி நம்பியார், அனுஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

ஒரு குட்டி தீவில் தனி ராஜாங்கம் நடத்தும் தாதா கும்பலை மம்முட்டியும் அவர்களது நண்பர்களும் இணைந்து போராடி விரட்டி அடிக்கிற கதை. பக்கா மாஸ் எண்டர்டெயின்மெண்ட் படம். இந்த இரண்டு படங்களும் தேவ்தாஸ், மதுர ராஜா என்ற பெயர்களிலேயே தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிற 18ந் தேதி வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விக்ரம் படத்தில் நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்விக்ரம் படத்தில் நடிக்கிறார் ... மொழியை கடந்து வாழுங்கள்: பிரியா ஆனந்த் மொழியை கடந்து வாழுங்கள்: பிரியா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram -  ( Posted via: Dinamalar Android App )
15 அக், 2019 - 14:04 Report Abuse
ram devdas movie last only telecasted in Vijay tv
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in