பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? |
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது படம் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு. தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா.ரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.
"ஜனரஞ்சகமான கதையமைப்பில், மக்கள் ரசிக்கும் விதத்தில் இப்படம் உருவாகியிருக்கிறது. வட தமிழகத்தின் வாழ்வியலோடு உலக அரசியலை இணைத்து படம் பார்ப்பவர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் படம் அமைந்திருக்கும்" என்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.
படத்தில் தினேஷ், லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். பழைய இரும்பு கடைக்கு லோடு அடிக்கும் பணி. ஒரு நாள் பழைய இரும்புகளுடன் சேர்ந்து ஒரு பழைய வெடிகுண்டு கிடைக்கிறது. இது இரண்டாம் உலப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காமல் போன குண்டு. அந்த குண்டு இப்போது வெடித்தாலும் நகருக்கே பெரும் அழிவை உண்டாக்கும். அந்த குண்டை கைப்பற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அதை லாரி டிரைவரான தினேஷ் எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.