‛பொன்னியின் செல்வன் 2' : ‛அக நக' முதல்பாடல் வெளியானது | அதிதி ஷங்கரின் அடுத்த படம் | தனுசுடன் மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் | விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின் | இயற்கை விவசாயத்தில் இறங்கிய நடிகர் கிஷோர் | படப்பிடிப்பில் தவறாக நடந்தாரா யஷ்? - ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் | நிதின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம் | தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகையை பிளாக் செய்து பின் அன்பிளாக் செய்த அல்லு அர்ஜுன் |
மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இப்போது அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்குகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் ரஷியாவில் நடந்து வருகிறது. அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிக்கிறார். விஜய் ஆண்டனி ஹீரோ, அருண் விஜய் வில்லன். ஷாலினி பாண்டே, ரைமா சென், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் ரஷ்யா சென்ற படக்குழுவில் ஷாலினி பாண்டே இல்லை. அவருக்கு பதிலாக அக்ஷரா ஹாசன் சென்றார். அப்போது தான் ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அக்ஷரா ஹாசன் நடிப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் "அக்னி சிறகுகள் படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானது நான் தான்" என்று நடிகை மீரா மிதுன் டுவிட்டரில் தெரிவித்ததோடு இயக்குனர் நவீனை கடுமையாக சாடியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நவீன் தனது டுவிட்டரில் "அக்னிச் சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத் தான் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அவர் தான் முதன்மை நாயகி. மீரா மிதுன் முதன்மை நாயகியாக ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
நவீனின் இந்த ட்வீட்டுக்கு மீரா மிதுன் அளித்துள்ள பதில்: உங்களுக்கு அந்தப் பேட்டி ஞாபகம் இருக்கிறதா?. இந்த விவகாரத்தில் ஊடகமும் பொய் சொல்கிறது என்கிறீர்களா. ஏஞ்சலினா ஜுலி போல நடிக்க வேண்டும் என்று எனக்கு சில காட்சிகள் நடித்து காட்டியது நினைவிருக்கிறதா? உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா. தொடர்ச்சியாக இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டே இருந்தீர்கள் என்றால், இது தொடர்பான வீடியோ ஆதாரமும் என்னிடம் உள்ளது. அதை ஊடகத்தில் வெளியிடுவேன்.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தான் என்னை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்து, உங்களைச் சந்திக்கச் சொன்னார். நீங்கள் ஒரு பெரிய பொய்யர். இந்தப் பேட்டியை அளித்தது நீங்கள் தான். ஒரு ஆணாக உண்மையைப் பேசுங்கள். அல்லது உங்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கிறதா. நல்ல ஒரு மனநல மருத்துவரைப் பாருங்கள். நான் இதற்கான ஆதாரங்களை வெளியிடத் தயார். என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்து நவீன் எழுதியிருப்பதாவது: ஆணாக இருப்பதைப் பெருமையாக நினைத்துக் கொள்ளும் ஆள் நானல்ல. பெண்ணாக எனது அம்மா, அக்கா, மனைவி அனைவருமே என்னை விடத் துணிச்சல் மிக்கவர்கள். உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள். இது தான் உங்களுடைய முட்டாள்தனமான டுவீட்களுக்கு, நான் அளிக்கும் கடைசி பதில். என்று தெரிவித்துள்ளார்.
இந்த டுவீட்டுக்கு மீரா மிதுனின் பதில்: வார்த்தைகளில் கவனம். ஒரு பெண்ணை மருத்துவரைச் சென்று பார்க்கச் சொல்ல உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. உங்களுக்கும் எனக்கும் நடந்த படம் தொடர்பான உரையாடல்கள் இருக்கிறது. அதை நான் வெளியிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பப் பெண்களையும் பாதிக்கும். வெளியிடட்டுமா? அதை எதிர்கொள்ள உங்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.
நவீன் - மீரா மிதுன் மோதல் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியிருக்கிறது.