தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் |
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா நடித்துள்ள பிகில் படத்தன் டிரைலர் நேற்றுமுன்தினம் வெளியானது. இதனை 2 கோடிக்கும் அதிகமான பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற சாதனை ஒரு பக்கம் இருந்தாலும், டிரைலரில் உள்ள காட்சிகளை எடுத்து பயன்படுத்தி நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.
இந்துஜா, விஜய்க்கு "குட்மார்னிங் கோச்" என்பதை மெதுவாக சொல்வார், "கேக்கல சத்தமா சொல்லு" என்பார் விஜய். இது ஷாருக்கான் நடித்த இந்திப் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி என அந்த காட்சியை இணைத்து வெளியிட்டு கலாய்த்திருக்கிறார்கள். விஜய், நின்ஜாக் சுற்றும் காட்சி, பேட்ட படத்தில் ரஜினி செய்தது என்ற அந்த காட்சியோடு ஒப்பீடு செய்திருக்கிறார்கள்.
பிகில் டிரைலரின் ஆடியோவை மட்டும் பயன்படுத்தி வடிவேலு காட்சிகளை இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக விஜய் "பிகிலு..." என்று கூறும் காட்சியை வைத்து பல கலாய்ப்பு வீடியோக்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஆட்டின் ஒலியுடன் ஒப்பிட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் ‛பிகில்' டிரைலருக்கு அதிக வரவேற்பு கிடைத்தாலும் மற்றொருபுறம் இந்த கலாய் வீடியோக்களும் சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன.