பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
எழில் இயக்கிய ‛மனம் கொத்தி பறவை' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் ஆத்மியா. பின் ‛போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே தோல்வி அடைந்ததால் ஆத்மியாவுக்கு வாய்ப்புகள் இல்லை. சில மலையாள படங்களில் நடித்தார்.
5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகி உள்ள ‛காவியன்' என்ற படத்தில் ஷாம் ஜோடியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை சாரதி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். வருகிற 18ல் படம் வெளிவருகிறது.
இதுதவிர சுப்பிரமணியம் சிவா இயக்கும் ‛வெள்ளை யானை' படத்தில் நடித்து வருகிறார். இது விவசாயம் சம்பந்தப்பட்ட படம். இதில் தஞ்சாவூர் பெண்ணாக நடித்திருக்கிறார். இரு படங்களும் அடுத்தடுத்து வெளிவருகிறது.