துல்கர் சல்மானின் ‛லக்கி பாஸ்கர்' | விஜய்யின் ‛லியோ' படத்திற்கு ஆளும் கட்சி மிரட்டலா? - தயாரிப்பாளர் மறுப்பு | 50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் |
‛பாரிஜாதம்' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவவர் தரண். அதன்பின் ‛போடா போடி, சித்து பிளஸ் 2, சமர்(பின்னணி), என்றென்றும், தகராறு, நாய்கள் ஜாக்கிரதை, காவல், அபியும் அனுவும், பப்பி' உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன், தரண் குமார் தனது மனைவியுடன் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது: ரஜினியை சந்திக்க வேண்டும் என்பது சிறு வயது கனவு. நானும், என் மனைவியும் அவரது தீவிர ரசிகர்கள். கடந்த 25 ஆண்டுகளாக அவரது படங்களை முதல் நாள், முதல் ஷோ பார்க்கத் தவறியதில்லை. அவரைச் சந்தித்த தருணம் வாழ்வின் உன்னதமான ஒன்றாக அமைந்தது. அவர் வீட்டில் எங்களை உபசரித்த விதம் மறக்க முடியாதது.
லதா, என்னை தங்களின் மகன் போலவே பாவித்தார்கள். அனைவரிடமும் மறக்காமல் என்னை அறிமுகப்படுத்தினார்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பாக எனது முதல் ஆல்பமான பாரிஜாதத்தை ரஜினி அறிமுகப்படுத்தினார். இப்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவருடன் அவர் வீட்டில் கிடைத்த நெருக்கமான சந்திப்பு, அவருடன் கழித்த தருணங்கள், அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் என் வாழ்வின் மறக்கமுடியாத பொன்னான நினைவுகள் என்றார்.