Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா - வெற்றி மாறன் இணைகிறார்கள்

14 அக், 2019 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Suriya---Vetrimaran-to-team-up-again

அசுரன் படத்தின் அசுர வெற்றிக்கு பிறகு வெற்றி மாறன் அடுத்து இயக்கப்போகும் படத்தில் பிசியாக இருக்கிறார். வடசென்னை 2ம் பாகத்தை முடிப்பதா? அல்லது சூரியை கதையின் நாயகனாக கொண்டு அடுத்த படத்தை இயக்குவதா என்ற குழப்பதில் இருந்தார்.

அசுரனின் வெற்றியால் மகிழ்ந்திருக்கும் தயாரிப்பாளர் தாணு, வெற்றி மாறனின் அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது பெரிய நட்சத்திரம் நடிக்கும் பெரிய படமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் வட சென்னையையும், சூரி படத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்த படத்தை இயக்குகிறார். இதில் நடிக்க அவர் சூர்யாவை அணுகியதாகவும், கதை கேட்ட சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டதாகவும், ஆனால் இன்னும் தேதிகள் ஒதுக்கித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவின் ‛காப்பான்' படம் அவருக்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் நஷ்டம் இல்லாமல் தப்பியது. அடுத்து சுதா கொங்கரா இயக்கும் சூரரைப்போற்று படத்தில் நடித்து வருகிறார். அடுத்து, சிறுத்தை சிவா இயக்கதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சிவா, தற்போது ரஜினி படத்தை இயக்க சென்று விட்டதால் அதற்காக ஒதுக்கி வைத்திருந்த தேதிகளில் வெற்றி மாறன் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு இன்னும் ஒரு சில நாளில் வெளிவரும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை சுற்றலில் விட்ட நமீதா !டோலிவுட்டில் தனது ஸ்லிம் ஆல்பத்தை ... ஸ்ரீகாந்த் - நடன மாஸ்டர் தினேஷின் ‛சம்பவம்' ஸ்ரீகாந்த் - நடன மாஸ்டர் தினேஷின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Valliappan - Chennai,இந்தியா
14 அக், 2019 - 20:08 Report Abuse
Valliappan வெற்றிமாறன் தயவு செய்து வடசென்னை போல கேவலமான படம் கேவலமான காட்சிகள் கொண்டு பண்ண வேண்டாம்..
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
14 அக், 2019 - 11:46 Report Abuse
mindum vasantham திறமையான நடிகர் இவருக்கு ஒரு வெற்றி தேவை
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14 அக், 2019 - 11:09 Report Abuse
 nicolethomson என்னதான் மதம் மாறினாலும் இந்த மனுஷங்க ஒத்துக்க மாட்டேங்குறாங்க , என்கூட கேரியர் ஸ்டார்ட் பன்னவனெல்லாம் முதல்வர் ரேஞ்சுக்கு போன பின்னாடி நான் இன்னமும் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in