Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அசுரன் படம்; தனுஷை பாராட்டிய கமல்!

13 அக், 2019 - 14:22 IST
எழுத்தின் அளவு:
kamal-praises-asuran-movie

வெக்கை' நாவலின் கதையை மையமாக வைத்து, இயக்குநர் வெற்றி மாறன் சமீபத்தில் 'அசுரன்' படத்தை இயக்கியுள்ளார். நடிகர் தனுஷ், மலையாள நடிகை மஞ்சு வாரியர், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். எஸ்.தாணு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில், நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர் நடிப்பை பலரும் பாராட்டுகின்றனர். மேலும், இதில் பசுபதி, பிரகாஷ் ராஜ், டிஜே, கென், ஆடுகள் நரேன், பவன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த நிலையில், இந்தப் படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகர் தனுஷையும், இயக்குநர் வெற்றி மாறனையும் பாரட்டி வருகின்றனர்.


நேற்று, இந்தப் படத்தை தன்னுடைய மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து நடிகர் கமல் பார்த்திருக்கிறார். அசுரன் படம் கமலை வெகுவாக கவர்ந்து விட்டது.


இதையடுத்து, வெளி நாட்டில் சூட்டிங்கில் இருக்கும் நடிகர் தனுஷை போனில் தொடர்பு கொண்ட நடிகர் கமல், அவருக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு, தொடர்ந்து இதே மாதிரியான நல்ல கதையமைசம் உள்ள படங்களில் நடிக்கவும் கேட்டுக் கொண்டார்.


அதேநேரம், இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கும் போனில் நடிகர் கமல் வாழ்த்து கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கட்டில்; அப்படிப்பட்ட படமாக நினைக்க வேண்டாம்: சிருஷ்டிகட்டில்; அப்படிப்பட்ட படமாக நினைக்க ... திரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ஹன்சிகா! திரில்லர் வெப்சீரிஸில் நடிக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in