Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நடிகை தமன்னாவின் தொழில் பக்தி பாராட்டுக்குரியது: சிரஞ்சீவி

13 அக், 2019 - 13:06 IST
எழுத்தின் அளவு:
chiranjeevi-praises-tamanna

சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. படம், மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதால், படக் குழுவினர் அனைவரும் இந்தியாவில் பல நகரங்களுக்கும் சென்று படத்தை முடிந்த மட்டும் விளம்பரப்படுத்தினர். ஆனால், இப்படி நடத்தப்பட்ட எந்த நிகழ்ச்சிக்கும், படத்தில் பிரதான கேரக்டரில் நடித்திருந்த நடிகை நயன்தாரா வரவில்லை. அவரைப் போலவே படத்தில் நடித்திருந்த நடிகை தமன்னா, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்தார்.

இது குறித்து நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது:


படங்களில் நடிப்பதோடு மட்டும் தங்கள் பணி நிறைவடைந்து விடுவதாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. தயாரிப்பாளர், எத்தனை பெரிய தொகையை முதலீடாகப் போட்டு படத்தை எடுக்கிறார்? அந்த முதலீட்டை திருப்புவதற்கு அவரோடு சேர்ந்து, படத்தில் நடிக்கும் ஒவ்வொருவரும் மெனக்கெட வேண்டும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதன்படி நடக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அது தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். இதை எல்லோரும் உணர வேண்டும். நடிகை நயன் தாரா, படத்துக்கான விளம்பர நிகழ்ச்சியை புறக்கணித்ததால், படத்துக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என சொல்லவில்லை. இருந்தாலும், விளம்பர நிகழ்ச்சிகளுக்கு அவர் வந்திருக்க வேண்டும்.


படத்தைப் பொறுத்த வரையில், நடிகை நயன் தாரா முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தாலும், நடிகை தமன்னாவின் கேரக்டர் தான் படத்தில் என்னுடைய கேரக்டருக்கு அடுத்து அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. அவரது தொழில்பக்தி மற்றும் திறமையை கண்டு நான் வியந்தேன். அதனால்தான், அவரை மனதாரா பாராட்டுகிறேன். அதற்காக யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.


இவ்வாறு சிரஞ்சீவி கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் பாசில்மீண்டும் வெற்றி கூட்டணி அமைத்த பஹத் ... யானை தந்தம் வழக்கை ரத்து செய்ய வேண்டும்: மோகன்லால் மனு யானை தந்தம் வழக்கை ரத்து செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in