Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கையை டெட்டால் போட்டு கழுவும் விஜய்: வெளுத்து வாங்கும் சாமி

13 அக், 2019 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Controversial-director-Samy-slams-actor-Vijay

பிகில் படத்தின் இசைவெளிட்டு விழாவில், யாரை எங்கு வைக்க வேண்டுமோ; அவரை அங்குதான் வைக்க வேண்டும். அப்போதுதான் எல்லாம் சரியாக அமையும்' என்று நடிகர் விஜய் பேசியதற்கு எதிராக, அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இயக்குனர் சாமி, நடிகர் விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மிருகம், உயிர்', சிந்து சமவெளி உள்ளிட்ட சர்ச்சைப் படங்களை இயக்கியவர் இயக்குநர் சாமி. 2015ல் கங்காரு என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. தற்போது, அடுத்தப் படத்துக்கான பணிகளைக் கவனித்து வருகிறார் இயக்குநர் சாமி. இதற்கிடையில், நடிகர் விஜய்யை விமர்சித்து அவர் பேசியிருக்கும் வீடியோ பதிவொன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.


அதில் சாமி கூறியிருப்பதாவது :


முன்னாள் இளைய தளபதி விஜய் சார் எப்படி இருக்கீங்க? என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என தெரியவில்லை. நான், உங்களை நான்கு முறை மட்டுமே சந்தித்துள்ளேன். மூன்று முறை உங்கள் வீட்டில். சந்தித்தேன். உங்கள் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருடைய தோஸ்த் படத்துக்கு நான் தான் வசனம் எழுதினேன். அந்தச் சமயத்தில், சாலிக்கிராமம் ஸ்டேட் பாங்க் காலனி வீட்டில், உங்களை சந்தித்துள்ளேன்.


அதற்குப்பின், ஒருமுறை இரண்டு மணி நேரம் அன்றில் பறவைகள் கதைச் சொல்லியிருக்கிறேன். இதெல்லாம், 2000ல் நடந்தது. மிருகம்', உயிர், சிந்து சமவெளி, கங்காரு போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கிய இயக்குநர் சாமி, நான் தான். உங்களிடம் அன்றில் பறவைகள் என்ற குடும்பக் கதையைச் சொல்ல வந்தேன். அதை நீங்கள் ப்ரியமானவளே படத்தின் ஷூட்டிங்கில்தான் கேட்டீர்கள். சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்; பிரச்சினையில்லை.


நடிகர் ரஜினி மாதிரி நடிப்பை மட்டும் பாருங்கள். வாயைத் திறந்து பேசாதீங்க ப்ளீஸ். ஏனென்றால், நீங்கள் பேசுவதால், உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறீர்கள். பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, யாரை எங்கு வைக்கணுமோ அங்கு வைக்கணும் என பேசினீர்கள். அப்படியென்றால், கடவுள் உங்களை எங்கு வைக்க வேண்டுமோ, அங்குதான் வைத்துள்ளார். நீங்கள் தேவையில்லாமல் வாயைத் திறந்து இஷ்டத்துக்கும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அதனால் மாட்டிக் கொள்கிறீர்கள். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.


சினிமாவில் மட்டும் நீங்கள் நடிகர் அல்ல; நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் என்பது எனக்குத் தெரியும். ரசிகர்களுடன் வாரந்தோறும் போட்டோ எடுத்துக் கொண்டு, என் நெஞ்சில் குடியிருக்கும் தெய்வங்கள் எனப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவர்களுடன் கை கொடுத்துவிட்டு, போட்டோ எடுத்துவிட்டு, வீட்டுக்கு உள்ளே போய் டெட்டால் போட்டு கை கழுவியதையெல்லாம் நானே பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட நீங்கள்தான், யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு வைக்க வேண்டும் என பேசுகிறீர்கள். உங்களின் உண்மையான முகம் வெளியுலகிற்கு தெரியவந்தால், உங்களை உங்கள் ரசிகர்கள் கூட சீண்ட மாட்டார்கள். புறக்கணிப்பார்கள். இப்படியிருக்கும் நீங்கள், மற்றவர்கள் குறித்தெல்லாம் பேச எந்த அருகதையும் இல்லை. இனியும் அப்படி நீங்கள் பேசினால், விளைவுகள் மோசமாக இருக்கும்.


இவ்வாறு சாமி பேசியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (48) கருத்தைப் பதிவு செய்ய
வங்கக் கடலில் வாய்ப்பில்லை; அரபிக் கடலில் சுனாமியாக வருவேன்: மீராவங்கக் கடலில் வாய்ப்பில்லை; அரபிக் ... அட்லியை பாராட்டும் பில் டூக் அட்லியை பாராட்டும் பில் டூக்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (48)

Praveen - Chennai,இந்தியா
20 அக், 2019 - 08:43 Report Abuse
Praveen Vijay Sir ah pathi pesaratha vittutu urupadiya nalla vazhila munneratha pathi yosinga director.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
20 அக், 2019 - 08:29 Report Abuse
Jayvee நடிகர் விஜய் நிஜ வாழ்க்கையில் வில்லன்
Rate this:
jeykey - theni,இந்தியா
19 அக், 2019 - 14:04 Report Abuse
jeykey அவனோட கையை தானே கழுவினான், ரசிகர்களை கையை கழுவி விட்டு வரசொல்லலயே.
Rate this:
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17 அக், 2019 - 16:35 Report Abuse
Cheran Perumal கோடிகணக்கானவர்களுக்கு விஜய் ஜீசசுக்கு சமம். தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீர்கள் சார்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
19 அக், 2019 - 17:12Report Abuse
JMKவீனா போன விஜய் ரசிகர்களுக்கு சரியான செருப்படி ? இனியவது திருந்துவார்களா ?...
Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
17 அக், 2019 - 07:57 Report Abuse
Ranganathan Venkata Subramanian நடிகர்களின் பேச்சை தமிழன் உண்மை என்கிறான் உண்மையாகவே குப்பை அள்ளும் பிரதமரை நடிப்பு என்கிறான் போதை (ஏமாளி ) தமிழன் தெளிவது எப்போது ? நம்பிக்கைதான் வாழ்கை நம்புவோம் தமிழன் தெளிவான என்று |||
Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in