Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி திடீர் இமயமலை பயணம்

13 அக், 2019 - 10:33 IST
எழுத்தின் அளவு:
rajini-go-to-himalayas

நடிகர் ரஜினி நடித்த தர்பார் படத்தின் வேலைகள் சமீபத்தில் நிறைவடைந்தன. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. தர்பார் பட வேலைகள் முடிந்த பிறகு ரஜினி, புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார், முழுநேர அரசியலில் இறங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையிலும், இப்போதைக்கு அரசியல் இல்லை என்பது போலவும் ரஜினியின் புதிய பட அறிவிப்பு 2 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று (அக்.,13) காலை ரஜினி, திடீரென 5 நாள் பயணமாக இமயமலை புறப்பட்டு சென்றுள்ளார்.


சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை செல்லும் ரஜினி, அங்கிருந்து டேராடூன் செல்ல உள்ளார். டேராடூனில் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு சாலை வழியாக ரிஷிகேசில் உள்ள பாபா குகைக்கு செல்ல உள்ளார். நவம்பர் மாத இறுதியில் இமயமலை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அக்டோபர் மத்தியிலேயே புறப்பட்டுச் சென்றுள்ளார். விரைவில் புதிய படத்திற்கான ஷூட்டிங் துவங்கப்படலாம் என்பதால் தான் ரஜினி, திட்டமிட்டதை விட முன்கூட்டியே இமயமலைக்கு ஆன்மிக பயணம் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (25) கருத்தைப் பதிவு செய்ய
பிறந்தநாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு?பிறந்தநாளில் பிரபாஸ் திருமண ... அக்னி சிறகுகள் குழுவுடன் பிறந்த நாள் கொண்டாடிய அக்ஷரா! அக்னி சிறகுகள் குழுவுடன் பிறந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (25)

Tamil - Trichy,இந்தியா
15 அக், 2019 - 10:37 Report Abuse
Tamil இனிய பயணம் அமைய வாழ்துக்கள். இப்பிடியே இருந்துடுங்களேன். ஏன் அரசியல் நாடகம். நாட்டை கெடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்க அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாடீங்க.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
14 அக், 2019 - 07:54 Report Abuse
மணி கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு உரிமையான காவேரி தண்ணீரை கொடுப்பதில்லை, ஆக சிவாஜிராவ் கெய்க்வாட் அவர்கள் தனது சொந்த மாநிலமான கர்நாடகத்திற்கு சென்று ஒரு கட்சி ஆரம்பிச்சு ஆட்சியை பிடித்து முதல்வராகவேண்டும், அவருக்கு உயிருக்கு உயிரான ரசிகர்கள் வாழும் தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விட வேண்டும்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 அக், 2019 - 10:35Report Abuse
Mirthika Sathiamoorthiகாவேரி நடுமன்றம் அமைகாத மத்திய அரசையும் காவேரி வழக்கை ஏற்றுநடத்தும் நீதிமன்றத்தை கேக்கமாட்டோம் அதற்க்கு பதில் ரஜினியை கேப்போம் ஏனென்றால் அவரிடம்தான் கர்நாடக அணையின் சாவி இருக்கு....அவர் அங்கு கட்சி ஆரம்பிச்சு தண்ணீர் தரவேண்டும், அப்புறம் இங்கே வந்து கட்சி ஆரம்பிக்கவேண்டும், ரஜினி இங்கே வந்தவுடன் கர்நாடக அரசு தண்ணியை நிப்பாட்டிடுவான்...உடனே ரஜினி மறுபடியும் அங்கு சென்று கட்சி ஆரம்பிச்சு தண்ணீர் திறந்து விடவேண்டும்...மறுபடியும் இங்கு வந்து கட்சி ஆரம்பிக்க வேண்டும்....திரு மணி போடும் ஒரு ஓட்டுக்கு எவ்வளவு முறை கட்சி ஆரம்பிப்பது? அதுசரி, தண்ணிர் வரும்வரை யார் ஆள்வது ?அதுவரை அன்னான் எங்கள் தானை தலைவன் இடப்படியே முதல்வராக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம் சரிதானே? இவர் வேண்டாமா சரி தொலையுது , யார் வந்த காவேரி தண்ணீர் வருமோ அவரே முதல்வராக தொடர்வார்..சரிதானே திரு மணி சார்?( அந்த யாருன்னு கொஞ்சம் ஏன் காதுல மட்டும் சொல்லுங்க ).....இல்லையேல் தண்ணீர் கொடுக்காத கர்நாடகத்தை எதிர்த்து தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணிப்போம்...( எப்புடி ஓட்டைபோடாம கருதுமட்டும் போடறதுக்கு ஐடியா..நான் இந்த முறை ஓட்டை போடல ஏன் ? காவேரி தண்ணி வரல....என்ன ஒரு ராஜதந்திரம் )...
Rate this:
மணி - புதுகை,இந்தியா
14 அக், 2019 - 07:47 Report Abuse
மணி எல்லாம் ஒரு விளம்பரம், பில்டப்பு...அரசியலுக்கு வர்றாரு வர்றாறுன்னி ரொம்ப பில்டப்பு கொடுக்குறாங்க, இப்படித்தான் பாபா படத்தையும் 2002ல ஓவர் பில்டப் கொடுத்தாங்க, தியேட்டருக்குள்ள பொநவேனெல்லாம் சீட்டை புடுங்கிகிட்டு வெளில ஓடுனானுங்க....சிவாஜிராவ் கெய்க்குவாட் சொச்ச காலத்தை தான் பிறந்த இடத்தில் போயி நிம்மதியாய் கழிப்பது நல்லதென்பது என்னுடைய கருத்து.
Rate this:
மணி - புதுகை,இந்தியா
14 அக், 2019 - 07:40 Report Abuse
மணி சிவாஜிராவ் கெய்க்கவாட் அவர்கள் சிறந்த ஆன்மீகவாதி. வேறெந்த சிறப்புமில்லை அவரிடம்.
Rate this:
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
14 அக், 2019 - 07:20 Report Abuse
Siva Subramaniam ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்களுமிருப்பார்கள் இதற்க்கு இந்த செய்தி ஒரு எடுத்துக்காட்டு.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 அக், 2019 - 10:53Report Abuse
Mirthika Sathiamoorthiயார் ஏமாற்றுபவர்கள்? யார் ஏமாறுபவர்கள்? ரஜினி ஏமாற்றுபவர் சரி புரியுது.என்ன ஏமாத்திட்டாருன்னு புரியலையா..இமயமலை போவதொரு ஏமாற்றா? வைக்க வேண்டிய இடத்தில வைக்கும்ன்னு சொல்லிட்டு லண்டன் பறக்கறது சரி , ஆனா அடுத்த படம் ஆரம்பிக்கும் இடைவெளியில் சிறிது ஓய்வெடுக்க தான் விரும்பிய இடத்துக்கு போனா ஏமாத்த? உஷ் முடியல....அப்புறம் யார் ஏமாறுபவர்? ரசிகர்கள் எங்களை சொன்னீர்களா ?மாவீரன்னு பேனாவில் நெஞ்சில் எழுதி சட்டையை திறந்துபோட்டு திரிந்ததுக்கு ஆசிரியரால் முட்டிபோட்டு நின்ற போது நினைத்ததில்லை ரஜினி முதல்வராவர் நமக்கு கவுன்சிலர் போஸ்ட் கிடைக்குமான்னு. பணக்காரனை அடுத்தடுத்து நான்கு காட்சிகள் பார்த்தபோதும் நினைத்ததில்லை இவர் அரசியலுக்கு வரணும்ன்னு....அவர் அரசியலுக்கு வந்தாலும் வரட்டினாலும் நாங்கள் அவரின் முரட்டு ரசிகர்கள்...நாங்கள் அவரின் எந்த முடிவையும் தலைவணங்கி ஏற்பவர்கள் நாங்கள் ஏமாந்தவர்கள்...அரசியல் ஆதாயத்துக்கு பின் செல்ல நாங்கள் என்ன கரைவேட்டி மூன்றாம் தர அரசியல்வாதிகள்? ஒரு வேலை நீங்கள் குறிப்பிட்ட ஏமாளிகள் அவரை முதல்வராக்கும் தமிழக வாக்காளர்கள் ?...
Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in