Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாமாங்கம் படத்திற்கு தமிழில் வசனம் எழுதும் இயக்குனர் ராம்

12 அக், 2019 - 18:43 IST
எழுத்தின் அளவு:
Director-Ram-wrote-dialogue-for-Mammootty-film

மலையாளத்தில மம்முட்டி நடிப்பில் பழசிராஜா படத்திற்கு பிறகு மிகப் பிரமாண்டமான வரலாற்றுப் படமாக உருவாகி உள்ள படம் மாமாங்கம். பத்மகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் வரும் நவம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் இந்த படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை இயக்குனர் ராம் எழுதி இருக்கிறார். கூர்மையான வசனங்களை எழுதுவதில் வல்லவரான ராம் இந்த வரலாற்று படத்திற்கு வசனம் எழுதுவது ரொம்பவே பொருத்தமானது. மேலும் பேரன்பு படத்தில் மம்முட்டியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குனர் ராம், சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் மாமாங்கம் படத்தின் ட்ரெய்லரை மம்முட்டியுடன் இணைந்து வெளியிட்டார்.

அதுமட்டுமல்ல மம்முட்டி மற்றும் மாமாங்கம் படக்குழுவினருடன் சேர்ந்து நேற்று தனது பிறந்தநாளையும் கேரளாவில் கொண்டாடியுள்ளார் ராம். தற்போது மாமாங்கம் படத்தின் தமிழ் பதிப்புக்கான டப்பிங்கில் ஈடுபட்டுள்ள மம்முட்டிக்கு அருகிலேயே இருந்து வசன மேற்பார்வையும் பார்த்து வருகிறார் இயக்குனர் ராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம்‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம் பிறந்தநாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு? பிறந்தநாளில் பிரபாஸ் திருமண ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in