Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛பிகில் டிரைலர் ‛வெறித்தனம்

12 அக், 2019 - 18:35 IST
எழுத்தின் அளவு:
How-is-Bigil-Trailer.?

அட்லீ - விஜய் கூட்டணி, மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‛பிகில். நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. ரஹ்மான் இசையமைக்க, ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில் படத்தின் டிரைலர் இன்று(அக்.,12) மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. 2.41 நிமிடம் ஓடும் இந்த டிரைலரில் விஜய் பிகில் என்ற கால்பந்தாட்ட வீரர், கோச் மற்றும் ரவுடியாக வருகிறார்.

கால்பந்தாட்டத்தில் பெரிய அளவில் சாதித்த விஜய், ஒருக்கட்டத்தில் அதை விட்டு ஒதுங்கி நிற்க, கால்பந்து விளையாட்டில் சாதிக்க துடிக்க பெண்களுக்காக மீண்டும் கோச்சாக களமிறங்கி, தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் என படம் பற்றி ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது இந்த டிரைலர்.

‛‛ரொம்ப ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட, காதலுக்கு மரியாதை எல்லாம் உனக்கு மறந்தே போச்சு என நயன்தாரா ரொமான்ஸ் செய்வதும், பிகிலால் நாட்டிற்கு பெருமை என ஜாக்கி ஷெராப் பெருமை பேசுவதாகவும், ‛‛புட்பால் எல்லாம் தெரியாது, ஆனால் எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் போன்ற பஞ்ச் டயலாக்குகளும் இடம் பெற்றுள்ளன.

விஜய் படத்திற்கே உண்டான ஆக்ஷன், பரபரப்பு, ரொமான்ஸ், காமெடி என எல்லாமும் கலந்து இந்த டிரைலரை கொடுத்திருக்கிறார்கள். அதற்கு ரஹ்மானின் பின்னணி இசையும் பெரிதும் உதவி இருக்கிறது.

இதை விட முக்கியம் விஜய்யின் முந்தைய படங்களில் அரசியல் சாயம் இருந்தது. ஆனால் பிகிலில் அப்படி இல்லை. ஒருவேளை டிரைலரில் இல்லாமல் படத்தில் வைத்திருக்கிறார்களோ என்னமோ.?

மொத்தத்தில் ‛பிகில் டிரைலர், விஜய் ரசிகர்களுக்கு வெறித்தனம்!

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான்கான் வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்த கொள்ளைக்காரன் கைதுசல்மான்கான் வீட்டில் 15 ஆண்டுகளாக ... மாமாங்கம் படத்திற்கு தமிழில் வசனம் எழுதும் இயக்குனர் ராம் மாமாங்கம் படத்திற்கு தமிழில் வசனம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

rajendiran - chennai,இந்தியா
14 அக், 2019 - 11:54 Report Abuse
rajendiran chakde india படத்தை தூசு தட்டி கொஞ்சம் மாற்றி எடுத்து இருப்பாங்க
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
13 அக், 2019 - 14:47 Report Abuse
Yaro Oruvan வெறித்தனம்... படம் வந்த பொறவு தெரியும் எங்கேயெல்லாம் கதையை களவாண்டருக்கான்ங்கிற மொள்ளமாரித்தனம்.. எப்படி களவாண்டாலும் படம் சொரித்தனமா இருக்கும் அது வேற.. இப்போதைக்கு என்ன மொள்ளமாரித்தனம் செஞ்சிருக்கானுவ .. அதுதான் மேட்டரு
Rate this:
Frank -  ( Posted via: Dinamalar Android App )
13 அக், 2019 - 10:09 Report Abuse
Frank விசயின் சொரித்தனம். இட்லியின் copycat மொல்லமாரித்தனம்.
Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
13 அக், 2019 - 09:19 Report Abuse
ரத்தினம் அந்நிய மதத்தின் கைப்பாவைகளான, காசுக்கு எது வேண்டுமானாலும் செய்யும் இந்த கூத்தாடிகளை ஆஹா ஓகோ என்று தலையில் தூக்கி வைத்து ஆடும் செம்மறியாடுகள், உள்ளவரையில் இவர்களுக்கு கொண்டாட்டம் தான்
Rate this:
13 அக், 2019 - 08:32 Report Abuse
Alex Jegan - singapore entered cine field from behind door... if any one know his 25 years back stories and how his father SAC played to bring this fellow up , no one will be the fan of this guy. This 2K fellows are dont know his behind stories, thats y following this guy.
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in