Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மிக மிக அவரசம் தள்ளிவைப்பு: தயாரிப்பாளர் வேதனை

11 அக், 2019 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Miga-Miga-Avasaram-postponed:-Producer-feel-very-bad

ஒரு பெண் போலீசின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‛மிக மிக அவரசம்'. இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உள்ளார். இந்தப்படம் காவல்துறையினருக்கு போட்டு காட்டப்பட்டு அவர்களின் ஆதரவை பெற்றது. இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்ட படம் தற்போது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

வெகுவாக மெனக்கிட்டு காத்திருந்து மிக மிக அவசரம் படத்தை வெளியிட இந்த அக்டோபர் 11ந் தேதி (இன்று) குறித்தோம். நல்ல திரையரங்குகள் கிடைத்து. எல்லோராலும் பாராட்டப்படுகிற ஒரு படம் மக்கள் பார்வைக்கு எப்படியாவது போய்ச் சேர வேண்டும் எனப் பார்த்து பார்த்து முடிவு செய்யப்பட்ட தேதி இது.
இந்த தேதி முடிவு செய்யப்பட்ட போது வேறு எந்தப் படங்களும் வெளியீட்டுக்கு திட்டமிடவில்லை. ஆனால் திடீரென பெட்ரோமாக்ஸ், அருவம் படங்கள் எங்கள் தேதியில் வெளியாகும் என அறிவித்தார்கள். எங்களுக்கு கிடைக்க வேண்டிய திரையரங்குகள் பாதிக்கு மேல் பெட்ரோமாக்ஸூக்கும் அருவம் படத்திற்கும் எடுக்கப்பட்டுவிட்டது.

அப்புறம் எப்படி சிறு படங்கள் வாழும்? மேடைக்கு மேடை சின்ன படங்கள் வாழணும்னு பேசுறோம். ஆனால் ஒரு படம் நல்லபடியா வந்தா கூட நாலு பெரிய படத்தை விட்டுக் காலி பண்றது என்ன நியாயம்னு புரியலை. அவ்வளவு விளம்பரம் செய்து சேனல் சேனலா ஏறி இறங்கி போட்ட உழைப்பும் பணமும் நேரமும் விரயமானது இந்த விரயத்திற்கு யார் பொறுப்பு?

முதலிலேயே இந்தப் படங்கள் வருவதாக இருந்தால் நான் என் பட வெளியீட்டை வேறு தேதிக்கு மாற்றியிருப்பேன். திடீரென அறிவிப்பு செய்வது எந்தவிதத்தில் நியாயம்? சிறுபடங்கள் வெற்றி பெற வழியே விடமாட்டார்களா?? சக தயாரிப்பாளர்களே இன்னொரு தயாரிப்பாளனின் போராட்டத்தை மதிக்கவில்லையென்றால்... திரையரங்குகளை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது?

சிறு படங்களையும், அடுத்தவர்களையும் வாழவிடுங்க. பெரிய படங்கள் முன்னாடியே தேதி போட்டு மற்றவர்களின் உழைப்புக்கும் பணத்துக்கும் மரியாதை கொடுங்கள். சிறு படங்கள் வெற்றி பெறும்போதுதான் சினிமா உயிரோட்டமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் சங்கத்திற்கு சூர்யா 10 லட்சம் நன்கொடைஇயக்குனர் சங்கத்திற்கு சூர்யா 10 ... தமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் படத்தில் ஹன்சிகா தமிழில் ஸ்ரீசாந்த்: மீண்டும் பேய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
11 அக், 2019 - 21:46 Report Abuse
Natarajan Ramanathan பெரிய படங்கள் வெளியிடும் தேதியை ஒருமாதம் முன்பே அறிவிக்கவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தால் இந்தமாதிரி பிரச்னைவராது.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in