இந்தியன் 2க்கு தயாரான காஜல் அகர்வால் | மாமனிதன் படத்திற்கு மேலும் 4 சர்வதேச விருதுகள் | ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது | சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் - விஜய் தேவரகொன்டா | தோல்விப் பட வரிசையில் அக்ஷய்குமாரின் 'ரக்ஷா பந்தன்' | வெள்ளித்திரையில் ‛விடுதலை' வேட்கை | இன்னும் ஓராண்டாகும் : ‛சலார்' புது ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்குப் படத்தை நிறுத்திவிட்டு வருகிறாரா ஷங்கர்? | திருவண்ணாமலையில் தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா | ‛திருச்சிற்றம்பலம்' படத்தை பார்த்த தனுஷ் |
ஒரு பெண் போலீசின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி உள்ள படம் ‛மிக மிக அவரசம்'. இதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கி உள்ளார். இந்தப்படம் காவல்துறையினருக்கு போட்டு காட்டப்பட்டு அவர்களின் ஆதரவை பெற்றது. இன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்ட படம் தற்போது ஒரு வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
வெகுவாக மெனக்கிட்டு காத்திருந்து மிக மிக அவசரம் படத்தை வெளியிட இந்த அக்டோபர் 11ந் தேதி (இன்று) குறித்தோம். நல்ல திரையரங்குகள் கிடைத்து. எல்லோராலும் பாராட்டப்படுகிற ஒரு படம் மக்கள் பார்வைக்கு எப்படியாவது போய்ச் சேர வேண்டும் எனப் பார்த்து பார்த்து முடிவு செய்யப்பட்ட தேதி இது.
இந்த தேதி முடிவு செய்யப்பட்ட போது வேறு எந்தப் படங்களும் வெளியீட்டுக்கு திட்டமிடவில்லை. ஆனால் திடீரென பெட்ரோமாக்ஸ், அருவம் படங்கள் எங்கள் தேதியில் வெளியாகும் என அறிவித்தார்கள். எங்களுக்கு கிடைக்க வேண்டிய திரையரங்குகள் பாதிக்கு மேல் பெட்ரோமாக்ஸூக்கும் அருவம் படத்திற்கும் எடுக்கப்பட்டுவிட்டது.
அப்புறம் எப்படி சிறு படங்கள் வாழும்? மேடைக்கு மேடை சின்ன படங்கள் வாழணும்னு பேசுறோம். ஆனால் ஒரு படம் நல்லபடியா வந்தா கூட நாலு பெரிய படத்தை விட்டுக் காலி பண்றது என்ன நியாயம்னு புரியலை. அவ்வளவு விளம்பரம் செய்து சேனல் சேனலா ஏறி இறங்கி போட்ட உழைப்பும் பணமும் நேரமும் விரயமானது இந்த விரயத்திற்கு யார் பொறுப்பு?
முதலிலேயே இந்தப் படங்கள் வருவதாக இருந்தால் நான் என் பட வெளியீட்டை வேறு தேதிக்கு மாற்றியிருப்பேன். திடீரென அறிவிப்பு செய்வது எந்தவிதத்தில் நியாயம்? சிறுபடங்கள் வெற்றி பெற வழியே விடமாட்டார்களா?? சக தயாரிப்பாளர்களே இன்னொரு தயாரிப்பாளனின் போராட்டத்தை மதிக்கவில்லையென்றால்... திரையரங்குகளை குறை சொல்லி என்ன ஆகப் போகிறது?
சிறு படங்களையும், அடுத்தவர்களையும் வாழவிடுங்க. பெரிய படங்கள் முன்னாடியே தேதி போட்டு மற்றவர்களின் உழைப்புக்கும் பணத்துக்கும் மரியாதை கொடுங்கள். சிறு படங்கள் வெற்றி பெறும்போதுதான் சினிமா உயிரோட்டமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.