லியோ பட இசை வெளியீட்டுவிழா நடத்தப்போவதில்லை :செவன் ஸ்கிரீன் ஸ்டுடீயோ | மகன்களின் முகத்தை காண்பித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் | விஜய்யின் 68வது படத்தில் இணைந்த இரட்டையர்கள் | தமிழ் ஹீரோ துன்புறுத்தினாரா...? - அப்படி சொல்லவே இல்லை என்கிறார் நித்யா மேனன் | பிரபாஸூக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா? | மீண்டும் ராஷ்மிகா உடன் இணையும் விஜய் தேவரகொண்டா | பாலிவுட்டில் ஹீரோயின் ஆகிறார் நித்யா மேனன் | ஆர்யாவின் வெப் தொடர் டிசம்பரில் வெளியாகிறது | 5 மொழிகளில் தயாராகும் 'பர்மா' | இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் |
லைகா தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி வெளிவந்த படம் 'காப்பான்'.
விவசாயம், ஆக்ஷன் என இரண்டும் கலந்த படமாக அமைந்தது. ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இருந்தாலும் படம் பற்றி பெரிய அளவில் பாராட்டி விமர்சனங்கள் வரவில்லை. விவசாயம் பற்றி முக்கியமான படமாக இருந்தாலும் சிலர் அதையே கிண்டல் செய்ததும் நடந்தது.
இருப்பினும் படம் மூன்று வாரங்களைக் கடந்து நான்காவது வாரத்தைத் தொட்டுள்ளது. படத்தின் வெற்றி குறித்து தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் படம் மொத்தமாக ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடினர்.
லைக்காவின் வசூல் அறிக்கை உண்மையெனில் இது சூர்யாவுக்கு மிகப் பெரும் வெற்றிப் படமாகும். தொடர்ந்து தோல்விப் படங்களையே கொடுத்து வந்த சூர்யாவுக்கு இந்தப் படத்தின் வெற்றி முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.