Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீ தேவியாக நடிக்க ஆசை: தமன்னா

10 அக், 2019 - 18:45 IST
எழுத்தின் அளவு:
Tamanna-likes-to-act-in-Sridevi-biopic

நடிகை தமன்னா நடிப்பில் பெட்ரோமாக்ஸ் என்ற படம் நாளை(அக்.,11) வெளியாகிறது. அவர் அளித்த பேட்டி: கண்ணே கலைமானே, சைரா என சீரியஸான படங்களில் அடுத்தடுத்து நடித்துள்ளேன். அதனால், தொடர்ந்தும் சீரியஸான படங்களில் நடிக்க யோசித்தேன். அந்த நேரத்தில்தான், வித்தியாசமான பெட்ரோமாக்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.

பெட்ரோமாக்ஸ் படம் முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால், உடனே ஒப்புக் கொண்டேன். பெட்ரோமாக்ஸ் லைட்டேத்தான் வேணுமான என கவுண்டமணி - செந்தில் ஆகியோர் இணைந்து ஏற்கனவே பேசிய வசனம் குறித்து எல்லோரும் பேசுகின்றனர். அது குறித்து, நிறைய கேட்கவும் செய்கின்றனர். அந்த வசனம் குறித்து எனக்கு பெரிதாக தெரியாது என்பதால், அதை இயக்குநர் ரோகின் எனக்கு விளக்கினார். ஒரு காலத்தில் காமெடியில் கலக்கிய நடிகர் கவுண்டமணியை சந்திக்க எனக்கு ஆவல் ஏற்பட்டிருக்கிறது. விரைவில், கவுண்டமணியை சந்திப்பேன்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்துவது போன்ற ஒரு செய்தியைப் பரப்புகின்றனர். அது தவறு. அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை. ஒரு வட்டத்துக்குள் சிக்கி, அதற்குள்ளேயே நடிக்க வேண்டும் என நான் நினைக்கவில்லை. எல்லா விதமான படங்களிலும் நடிக்க தான் விருப்பம். இப்போது, வாழ்க்கை வரலாற்று படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கில், அதில் ஸ்ரீ தேவியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன்.

இவ்வாறு நடிகை தமன்னா கூறினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த பிரியா அட்லீமாஸ்டருடன் அந்தரத்தில் யோகா செய்த ... அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து மீரா மிதுன் நீக்கம் அக்னிச் சிறகுகள் படத்திலிருந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
11 அக், 2019 - 05:07 Report Abuse
Mani . V "......நடிகை ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கில், அதில் ஸ்ரீ தேவியாக நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பெரிதும் மகிழ்வேன்.......". - கொலையை எப்படி காட்டுவார்கள் படத்தில்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in