சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் |
இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீஸ் முடிவு செய்துள்ளது. பொய் புகார் அளித்தவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
கும்பல் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பிரபலங்கள் மீது பீஹார் மாநிலம் முசாபர்பூர் நீதிமன்றத்தில் தேசத் துரோகம் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், திரைப்பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தவர் உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் தவறான தகவல்களை தெரிவித்து பொய் புகார் அளித்தவர் மீது 182வது சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.