Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கத்திற்கு பதிவு துறை நோட்டீஸ்

09 அக், 2019 - 11:00 IST
எழுத்தின் அளவு:
Registration-department-send-notice-to-Nadigar-Sangam

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்று கூறி அதற்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்துள்ளது. அதேபோன்று நடிகர் சங்கமும் சரியாக செயல்படவில்லை. ஏன் தனி அதிகாரியை நியமிக்க கூடாது என்று கேட்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுபற்றிய விபரம் வருமாறு:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் "தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதால், நிறை, குறைகள் மற்றும் புகார்கள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை" என சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள எம்.ஆர்.பி.சந்தனம், சித்திரலேகா ஆகியோர் பதிவுத்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பதிவுத்துறை சார்பாக நோட்டீசும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் "தென்னிந்திய நடிகர் சங்க செயல்பாடுகளை கவனிக்க ஏன் சிறப்பு அதிகாரியை நியமிக்கக்கூடாது?" என்று கேட்டு அதற்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி முறைப்படி நடிகர் சங்க தேர்தல் நடந்தது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வரும் 15ம் தேதி வழக்கு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு சங்க பதிவாளர் அனுப்பி உள்ள நோட்டீஸில் நடிகர் சங்கம் கடந்த ஒரு மாதமாக சரியாக செயல்படவில்லை, ஏன் சங்கத்தை தனி அதிகாரி நியமித்து நடத்தக்கூடாது என்று கேட்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக சங்கம் செயல்படவில்லை என்கிறார்கள். ஆனால், கடந்த 3 மாதமாக சங்கம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஷூட்டிங் நடக்கிறது, வங்கியில் பணம் டெபாசிட் செய்கிறோம். கடந்த மாதம் வரை பென்சன் தந்திருக்கிறோம். நடிகர்கள் பிரச்னையை எழுத்து மூலமாக வாங்கி அதற்கு பதில் அளித்து வருகிறோம். தவறான கண்ணோட்டத்தில் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். வாக்குகள் எண்ணப்பட்டால் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்றுவிடும் என்று தெரிந்த அதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்படுவதாக கருதுகிறோம். இதற்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வோம்.

இவ்வாறு பூச்சி முருகன் கூறி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் கோரிக்கை49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் ... தமிழில் வருகிறார் ஹாலிவுட் ஜெமினி மேன் தமிழில் வருகிறார் ஹாலிவுட் ஜெமினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in