Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் கோரிக்கை

09 அக், 2019 - 10:50 IST
எழுத்தின் அளவு:
Case-file-against-49-celebrities:-Kamal-request-to-Supreme-court

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்கள். ஜெய்ஸ்ரீராம் கோஷமிடச் சொல்லி நடக்கும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. பிரமதரை விமர்சித்து பிரதமருக்கே கடிதம் எழுதுவது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. தேச துரோக குற்றம் என்று பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இதற்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து நேற்று கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‛‛பிரதமர் ஒரு இணக்கமான இந்தியாவை நாடுகிறார். பார்லிமென்ட்டில் அவர் வெளியிட்ட அறிக்கைகள், பேசிய பேச்சுகள் அதை உறுதிப்படுத்துகின்றன. அரசு மற்றும் அதன் சட்டம் அதை கடிதத்திலும், உணர்வுகளிலும் பின்பற்ற வேண்டாமா? எனது சகாக்களில் 49 பேர் பிரதமரின் விருப்பத்திற்கு முரணாக தேசத் துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். எங்கள் உச்சநீதிமன்றம் ஜனநாயக முறைப்படி நீதியை நிலைநாட்டவும், பீகாரில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யவும் ஒரு குடிமகனாக நான் கேட்டுக்கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விபத்து காரில் நான் செல்லவில்லை: யாஷிகா ஆனந்த் மறுப்புவிபத்து காரில் நான் செல்லவில்லை: ... நடிகர் சங்கத்திற்கு பதிவு துறை நோட்டீஸ் நடிகர் சங்கத்திற்கு பதிவு துறை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
09 அக், 2019 - 12:06 Report Abuse
vira நீங்க ........
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in