Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விபத்து காரில் நான் செல்லவில்லை: யாஷிகா ஆனந்த் மறுப்பு

09 அக், 2019 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Yashika-Anand-denied-about-car-accident

‛இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். தற்போது உத்தமன், பீமராஜா படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் சென்னை நுங்கம்பாக்த்தில் உயர் ரக சொகுசு காரில் போதையில் வந்த இளைஞர்கள் ஒரு தொழிலாளி மீது மோதினர். படுகாயம் அடைந்த அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போதை இளைஞர்களுடன் நடிகை யாஷிகா ஆனந்தும் இருந்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது "அந்த இளைஞர்களுடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவரும் போதையில் இருந்தார். விபத்துக்கும், அவருக்கும் தொடர்பு இல்லை. நாங்கள் காரை ஓட்டியவர் மீது தான் வழக்கு போட முடியும். பயணித்தவர்கள் மீது போட முடியாது என்பதால் அந்த பெண்ணை விசாரித்து விட்டு அனுப்பி விட்டோம், அந்த பெண் நடிகையா என்பது பற்றி தெரியாது" என்றார்கள்.

இதுகுறித்து யாஷிகா ஆனந்த் கூறியிருப்பதாவது: என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பபடுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. விபத்து நடந்த காரில் நான் செல்லவில்லை. ஆனால் அந்த காரில் இருந்தது எனது நண்பர்கள் தான். விபத்து பற்றி கேள்விப்பட்டதும் அவர்களை பார்க்க நான் வேறொரு காரில் அங்கு சென்றேன். அங்கு என்னை பார்த்தவர்கள் நானும் விபத்து காரில் பயணித்தாக செய்தியை பரப்பி விட்டார்கள் என்கிறார் யாஷிகா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
புள்ளிங்கோ கெட்-அப்புக்கு மாறிய ரம்யா பாண்டியன்புள்ளிங்கோ கெட்-அப்புக்கு மாறிய ... 49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் கோரிக்கை 49 பேர் மீதான தேச துரோக வழக்கு: கமல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vira - tamil naadu,இந்தியா
09 அக், 2019 - 12:08 Report Abuse
vira நம்பிட்டோம்
Rate this:
09 அக், 2019 - 11:07 Report Abuse
Karthikeyan g அப்பாவி பொது மக்களின் உயிரோடு விளையாடும் உங்களையும் சினிமா துறையை சேர்ந்த சில நடிகர்கள் போதையில் வண்டி ஓட்டி எத்தனை பேர் கொன்று உள்ளீர்கள் மற்றவர்களையும் ஜெயிலில் பொட வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in