Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாக்லேட் சமுதாயத்திற்கான மருந்து

08 அக், 2019 - 12:43 IST
எழுத்தின் அளவு:
A-Chocolate-is-tonique-to-society

பெண்களை கடவுள்களாக, நதிகளாக கொண்டாடும், வணங்கும் இந்தியாவில் தான், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக, பலாத்காரம் அதிகமாக நடக்கிறது என்கிறது, ஒரு புள்ளி விபரம். விஞ்ஞான யுகம், நாகரிக காலம் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், பெண் குழந்தைகளை மிக கவனத்துடனும், எச்சரிக்கையுடன் வளர்க்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

இந்நிலையில், மிகப் பொருத்தமான காலக்கட்டத்தில் வெளியாகி இருக்கிறது, சாக்லேட் என்ற குறும்படம். பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் ஆபத்து, அவர்களை காக்கும் முறை குறித்து, மிக எதார்த்தமாக, அதேநேரம், கவனத்தை ஈர்க்கும்படி தயாரிக்கப்பட்டு உள்ளது. இருபதே நிமிடங்கள் தான்... ஆனால், சித்தரிக்கப்பட்ட காட்சிகளை, ஒரு திரைப்படத்துக்கு நிகராக எடுத்திருக்கின்றனர். அதற்கு, அந்த மொட்டை மாடி காட்சியே சாட்சி. மிகச் சில வசனங்களே என்றாலும், அவற்றில் இருக்கும் நிஜம், நம் உள்ளத்தில் அறைகிறது.

'சாக்லேட் கொடுத்தா டிரஸ்சை கழட்டணும்ல' என்று குழந்தை சொல்ல, பதறிப்போய் தந்தை அழ, அப்பாவித்தனத்துடன், 'ஏம்பா அழறே' என்று, அந்தக் குழந்தை கேட்கும் காட்சியில், கலங்கி விடுகிறது மனது. நிருபர்கள் மீரான் மற்றும் மோகன் எழுதியுள்ள, 'சிசுக்களை சிதைக்காதே, பூக்களை காக்கும்...' என்ற இரு பாடல்களும் அருமை. சிசுக்களை சிதைக்காதே... பாடலை, முதன் முறையாக குறும்படத்துக்காக பாடியிருக்கிறார், பவதாரிணி.

நட்டி என்ற நட்ராஜ், காயத்ரி, தேஜஸ்வினி, தீக்ஷனா, அல்கா என, அனைவருமே சிறப்பாக, இயல்பாக நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும், படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. லாவண்யா நான்சி என்பவர் இயக்க, பத்திரிகையாளர் கவிதா தயாரித்துள்ளார். காவல்துறை முன்னாள் அதிகாரி திலகவதி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், லதா ரஜினி, பத்திரிகையாளர் பாண்டே, மனோதத்துவ நிபுணர் என, பல தரப்பினரின் கருத்துகளையும் பதிவு செய்தது சிறப்பு.

குழந்தைகளுக்கு, 'குட் டச், பேட் டச்' என்ன என்பதை சொல்லித்தர வேண்டும். 'போக்சோ' சட்டம் என்று, பல விஷயங்களை, இருபதே நிமிடங்களில் சொல்லி இருக்கின்றனர்.

படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜு, ''இது படமல்ல, பாடம். சமுதாயத்திற்கு தேவையானது,'' எனப் பாராட்டியது, குறிப்பிடத்தக்கது. அனைவரும் பார்க்க வேண்டிய குறும்படம், சாக்லேட்.

இந்த சாக்லேட் குறும்படத்திற்கு தினமலர் மற்றும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் உதவினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஒத்தயாய்' நடித்தவர்கள்'ஒத்தயாய்' நடித்தவர்கள் அஜித் என் நண்பன், விஜய் அற்புதம் - ஷாரூக்கான் அஜித் என் நண்பன், விஜய் அற்புதம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in