Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு நடிச்ச படம் கைதி: கார்த்தி

08 அக், 2019 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Karthi-on-Kaithi-film

கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர் பிரபு மற்றும் விவேகானந்தா பிக்சர்ஸ் சார்பில் திருப்பூர் விவேக் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் கைதி. மாநகரம் படத்தின் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கார்த்தியுடன் நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் இணைந்து நடித்துள்ளனர்.


தீபாவளிக்கு வெளியாகும் கைதி படத்தின் டிரைய்லர்வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கார்த்தி பேசியதாவது: நாம் சில படங்கள் செய்ய வேண்டும் என நினைக்கும்படியான படங்கள் நமக்கு, எப்போதாவது தான் வந்து சேரும். மெட்ராஸ், தீரன் அந்த மாதிரி . அந்த வரிசையில் இப்போது கைதி.


ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டரை தெரிந்து கொண்டு பண்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப்படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிய வந்தது. அதை ஆசைப்பட்டு செய்துள்ளேன். ரசிகர்களுக்கு படம் எப்படி கொடுக்க வேண்டும் என்று தெரிந்த இயக்குனர் லோகேஷ், இதில எந்தளவு புதுதாக செய்ய முடியுமோ அதை செய்யலாம் என கூறினேன்.அதை மொத்த குழுவும் செய்துள்ளனர்.


முழுக்க முழுக்க இரவில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதில் நிறைய ஆக்ஷன் செய்துள்ளேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதிதான். இது ஒரு மல்டி ஹீரோ படமாக இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு. படம் முழுக்க ஆக்ஷன் தான்.


எனக்கு ஆக்ஷன் படம் என்றாலே ரொம்பவும் பிடிக்கும் இந்தப்படம் முழுக்கவே ஆக்ஷனாக உள்ளது. . இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கற்று கொள்ள முடிந்தது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். என்றார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி வீட்டில் நவராத்திரி கொண்டாட்டம்ரஜினி வீட்டில் நவராத்திரி ... 'ஜோக்கர்' இயக்குனரின் அடுத்த படம்! 'ஜோக்கர்' இயக்குனரின் அடுத்த படம்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 அக், 2019 - 16:06 Report Abuse
Vasudevan Srinivasan இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு நடிச்சுருக்கீங்க சரி ஆனால் படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் திரை அரங்கத்தினர் எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்கள் என்று யாரையும் 'நஷ்டப்படுத்தாத' படமாய் இருந்தால் போதும்..
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
09 அக், 2019 - 04:16 Report Abuse
 nicolethomson நான் காசு கொடுத்து பார்ப்பதற்கு எனக்கு உரிமை உள்ளதா? அல்லது நானும் ஊடகங்கள் கைதியா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in