மீண்டும் மாதவனுக்கு ஜோடியாகும் கங்கனா | ப்ரோ படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் பாலிவுட் நடிகை | ஷாருக்கான் குறித்து நெகிழும் பிரியாமணி | மீண்டும் கதாநாயகனாகும் பிரபல நடிகர் | வித்தைக்காரன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சதீஷ் | பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை |
வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள தர்பார் படம் குறித்து நடிகர் ஸ்ரீமன், தனது Iவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதில், தர்பார் படத்தில் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.
கூடவே, ரஜினியுடன் நடித்து நீண்ட காலம் ஆகி இருந்தது. அந்த குறை தற்போது நீங்கி விட்டது. ரஜினி உடன் நடிப்பதும், நடித்ததும் சந்தோஷம். எத்தனை உயரத்தில் இருந்தாலும், ரஜினியிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது பணிவு; அன்பு. எல்லோரிடமும் இதையேதான் அவர் பின்பற்றுகிறார். அப்படியொரு குணம் ஒரு சிலருக்குத் தான் இருக்கும். இன்றைய இளைய சமுதாயம், ரஜினியிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும், ரஜினியிடம் இருந்து பாராட்டுக்களையும்; ஆசிர்வாதத்தையும் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஸ்ரீமன், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தீனா படத்திற்கு பின் தர்பார் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.