Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காந்திக்கு பிடித்த பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி

04 அக், 2019 - 13:59 IST
எழுத்தின் அளவு:
Vaikom-vijayalakshmi-sing-Mahatma-Gandhis-favourtie-song

காமாராஜ் படத்தை தயாரித்து, இயக்கிய ரமணா கிரியேஷன் பாலகிருஷ்ணன், வெல்கம் பேக் காந்தி என்ற படத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்து, இயக்குகிறார். காந்தி இன்றைக்கு மீண்டும் உயிர்பெற்று வந்தால் இப்போதுள்ள சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வார் என்கிற மாதிரியான கதை.

இந்த படத்தில் காந்திக்கு பிடித்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். 'ஏக்லா சலோ ரே" என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...” என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. மகாத்மா காந்தி நவகாளியில் யாத்திரை மேற்கொண்டிருந்தபோது அவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இந்தப் பாடலைப் பாடி அவரை வரவேற்றனர்.

இந்தப் பாடலுக்கு ஏற்கனெவே ஏ.ஆர்.ரஹ்மான், விஷால் சேகர் போன்ற புகழ்பெற்ற இசை அமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். கிஷோர் குமார் அமிதாப் பச்சன் போன்றவர்களால் அவ்வப்போது சில தேசபக்தி படங்களுக்காகப் இப்பாடல் பாடப்பட்டுள்ளது.

வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள பாடலுக்கான காட்சிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் ஏற்கனெவே படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்று படம் வெளியாகும் தருணத்தில் உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பொன்னியின் செல்வன்: சத்யராஜ் விலகல்பொன்னியின் செல்வன்: சத்யராஜ் விலகல் பப்பி ஏ படம் அல்ல: இயக்குனர், ஹீரோ கியாரண்டி பப்பி ஏ படம் அல்ல: இயக்குனர், ஹீரோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in