யேசுதாஸ் குடும்பத்தின் மூன்று தலைமுறை பாடிய ஷியாமாராகம் ஆடியோ ரிலீஸ் | நான் மனஉளைச்சலில் இருக்கிறேன் : லாரன்ஸ் | நம்பர் 1 தான் எனக்கு இலக்கு - காமெடி நடிகர் ஷார்ம் விஸ்வநாதன் | இருட்டு, ரசிகர்களை மிரட்டும் - நடிகை விமலா ராமன் | பிரமோசனுக்காக டிக்-டாக்கில் நடனமாடும் ராஷ்மிகா | தெலுங்கில் அறிமுகமாகும் சோனாக்ஷி சின்ஹா | தொடையை காண்பித்து போஸ் கொடுத்த நித்யாமேனன் | விஜய்யின் பிகில் உலக அளவில் சாதனை! - அர்ச்சனா கல்பாத்தி | ரஜினியின் பாட்ஷா படம் பார்த்து விசிலடித்து ரகளை செய்த இந்துஜா! | 2019ல் த்ரிஷா, நடிக்க வந்து 18வது வருடத்திலும் தொடரும் பயணம் |
இசை அமைப்பாளர் இளையராஜாவின் இசை பயணம் பிரசாத் லேப்பில் உள்ள ரிக்கார்டிங் தியேட்டரில் இருந்து தொடங்கியது. தொடர் வெற்றிகளை அவருக்கு கொடுத்த பாடல்கள் அந்த தியேட்டரில் உருவானது தான். 70 எம்எம் திரை, அதன் முன்னால் பிரமாண்ட ஹால். அருகிலேயே ரிக்கார்டிங் வசதி என அதிகமான வசதிகளை கொண்டது. இளையராஜா தொடர் வெற்றிகளை கொடுத்ததால் அவருக்கு அந்த ரிக்கார்டிங் தியேட்டரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள பிரசாத் நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இதற்காக ஒரு ஒப்பந்தமும் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இடையில் பிரசாத் நிறுவனத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த வளாகத்தை விட்டு வெளியேறிய இளையராஜா, மீண்டும் அந்த இடத்துக்கு திரும்பினார். தற்போது இளையராஜா உடனான ஒப்பந்தக் காலம் முடிந்து விட்டதாகவும், அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லாததால் ரிக்கார்டிங் தியேட்டரின் வருமானம் குறைந்து விட்டதாகவும், இதனால் அந்த தியேட்டர் வளாகத்தை வேறொரு நிறுவனத்திற்கு பிரசாத் நிர்வாகம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளையராஜாவின் உதவியாளர் கபார், சென்னை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை வேறு ஒருவருக்கு வழங்கி உள்ளனர். இதனால் அந்த அலுவலகத்தில் உள்ள இசை கருவிகள் சேதமடைய வாய்ப்புள்ளது.
இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அத்துமீறி கம்ப்யூட்டர்கள், அலுவலக பொருட்களை வைத்து சிலர் எங்கள் வேலையை தடை செய்கிறார்கள். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.