Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2வில் தர்ஷன்

04 அக், 2019 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Tharshan-joints-in-Indian-2

சென்னை: பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன், கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நடிகர் தர்ஷன். ஆரம்பம் முதலே அவர் தான் டைட்டிலை வெல்வார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் அவர். இதனால் அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன், புதுப்பட வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார். தற்போது அவர் இந்தியன் 2 படத்திலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் இளவயது கதாபாத்திரம் ஒன்றிற்கு தர்ஷனை கமலே சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனை உறுதி செய்வது போல், பிக்பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன், சமீபத்தில் கமலை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தத் தகவலால் தர்ஷன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால், பிக்பாஸில் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி கூற தர்ஷன் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது எனவும், அவர் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.

அதிகாரப்பூர்வமாக இந்தியன் 2சில் தர்ஷன் நடிக்கிறாரா இல்லையா என்பதை படக்குழு அறிவித்தால் மட்டுமே இதன் உண்மை வெளியில் வரும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த போது, ஒரு டாஸ்க்கில் கமல் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் தர்ஷன். அப்போது அதனை பாராட்டிய கமல், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்பினால் தர்ஷனாக செல்வேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவேன்!1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவேன்! மீண்டும் ஷெரீனை அழ வைத்த வனிதா மீண்டும் ஷெரீனை அழ வைத்த வனிதா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

mukundan - chennai,இந்தியா
04 அக், 2019 - 11:52 Report Abuse
mukundan அப்போ காமலுக்காக தர்ஷன் வெளியேற்ற பட்டாரா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in