நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
ராகவா லாரன்ஸ் இயக்கம், நடிப்பில், ராய் லட்சுமி, சரத்குமார் மற்றும் பலர் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் 'காஞ்சனா'. இப்படத்தை ஹிந்தியில் 'லட்சுமி பாம்' என்ற பெயரில் ரீமேக் செய்கிறார்கள். ராகவா லாரன்ஸ் இயக்க, அக்ஷய்குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமான சில நாட்களிலேயே முதல் பார்வை என ஒரு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி இல்லாமல் அதை வெளியிட்டதாக படத்தை இயக்க மாட்டேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார். பின்னர், அவரை சமாதானப்படுத்தி படப்பிடிப்பை ஆரம்பித்தார்கள்.
தற்போது அப்படத்திற்காக திருநங்கை தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை நவராத்திரியை முன்னிட்டு அக்ஷய்குமார் வெளியிட்டிருக்கிறார்.
“நவராத்திரியை முன்னிட்டு லட்சுமி தோற்றத்தில் நான் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுகிறேன். உற்சாகமாகவும், பதட்டமாகவும் நான் நினைக்கும் ஒரு கதாபாத்திரம். ஆனால், வாழ்க்கை நமக்கு ஆறுதலான ஒரு வட்டத்தின் முடிவில் தொடங்குகிறது இல்லையா,” எனப் பதிவிட்டுள்ளார் அக்ஷய்.