‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
டிரைய்டன் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிப்பில் சித்தார்த், கேத்ரின் தெரசா நடிக்கும் படம் ‛அருவம்'. புதுமுக இயக்குநர் சாய்சேகர் இயக்கி உள்ளார். தமன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது சமூக கருத்துக்களை சொல்லும் பேய் படம். உணவு கலப்படம் குறித்து படம் பேசுகிறது.
இந்தப் படத்தில் நுகர்வுதிறன் குறைபாடுள்ள பெண்ணின் கேரக்டரில் நடித்துள்ளார் கேத்ரின் தெரசா. இதுகுறித்து அவர் கூறியதாவது: அருவம் படத்தின் கதையை கேட்டபோது முதலில் எனக்குப் பிடித்தது, அந்தப்படத்தில் இருந்த பெண் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் தான். பல படங்களில் இது இருப்பதில்லை. மிக வித்தியாசமாக அந்த கேரக்டர் எழுதப்பட்டிருந்தது.
ஜோதி எனும் கேரக்டரை செய்வதில் உள்ள சாவால்களை விரும்பி ஏற்றேன். ஜோதி நுகர்வுதிறன் குறையாடுள்ள ஒரு பெண். அவளால் எந்த பொருளையும் நுகர்ந்து பார்த்து அதன் மணத்தை கண்டுபிடிக்க முடியாது. அபூர்வமான இந்த குறைபாடு குறித்து இதுவரை எந்த படமும் பேசியதில்லை என்று நினைக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது எனக்கு சவாலாக இருந்தது.
சித்தார்த் உடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அவர் சீரியஸானவர் என நினத்தேன் ஆனால் அவர் ஜாலியாக இருந்தார். இயக்குநர் இந்தப்படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் அனைவரும் எங்கள் உழைப்பை தந்திருக்கிறோம். இரண்டே பாடல்கள் தான், நன்றாக வந்துள்ளது. மிக விரைவில் படம் வெளியாகிறது, உங்களை எல்லாம் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். என்றார்.