Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராசி இல்லாதவரா சிவாஜி? - பிறந்தநாள் ஸ்பெஷல்

01 அக், 2019 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Sivaji-birthday-special

சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அந்த அதிசய பிறவிக்கு பெயர் "சிவாஜி. தன்னை படைத்த கடவுளுக்கே, தன் நடிப்பில் முகம் கொடுத்தவர். பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா?

வீரபாண்டிய கட்டபொம்மனாக, கப்பலோட்டிய தமிழனாக, பாட்டுக்கொரு புலவன் பாரதியாக, கர்ணனாக சிவாஜி நடித்தது வரலாற்றின் பதிவு. கட்டபொம்மன் இப்படி இருப்பார் என்று சிவாஜியின் நடிப்பை பார்த்து தானே தெரிந்து கொண்டோம். திருமால் பெருமை, திருவருட்செல்வர், திருவிளையாடல் போன்ற படங்களில் தெய்வகளை கண்முன் நிறுத்தியவர். தமிழில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

வாழ்நாளின் இறுதிவரை தொழில் பக்தி, நேரம் தவறாமை போன்ற குணங்களால் போற்றப்பட்டார். இன்றைய இளம் நடிர்களுக்கு முன்னோடியாக திகழ்பவரும் அவர் தான். இன்று அவரது 92வது பிறந்தநாள். அவரது வாழ்க்கையும், சினிமாவும், வரலாறும் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் அறியாத விஷயங்கள் பல உண்டு அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

நடிகர் திலகம் ஒரு ராசி இல்லாதவர் என்ற பொதுவான கருத்து எப்படியோ உருவாகி விட்டது. ஆனால் அவரை உணர்ந்தவர்கள், தெரிந்தவர்கள் இதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சிவாஜி தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து கொண்ட பலர் இன்று கொள்ளு பேரன் பேத்திகளோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு வெளியே எங்கும் தேட வேண்டாம். அவர்களது மகன், மகள்களே சாட்சி.

சிவாஜியின் கரம் பிடித்து வளர்ந்த உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ரஜினிகாந்த் இன்றைக்கு சினிமா உலகின் முன்னணியில் இருக்கிறார்கள். அன்னை இல்லம் இன்றைக்கு அசைக்க முடியாது குடும்ப பல்கலைகழகமாக இருக்கிறது. அவரது பேரன்கள் வரை இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவாஜியின் பெயரைக் கொண்ட சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக வெள்ளி விழா படங்களாக இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய சந்திரமுகி படம் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது. ஷங்கர் சிவாஜி என்ற பெயரிலியே படம் இயக்கினார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது.

அரசியலில் அவர் தோற்றதும், விருதுகள் வழங்காமல் அவரை புறக்கணித்ததும் அவரைச் சுற்றி நடந்த அரசியல் சூழ்ச்சிகள். இரண்டுக்கும் காரணம் உண்டு. விருது வழங்கப்படாமல் போனதற்கு அவர் காங்கிரசில் இருந்து கொண்டு காங்கிரசையே விமர்சித்தார். அரசியலில் தோற்றதற்கு காரணம், அவருக்கு மேடையில் பொய் பேசத் தெரியாது.

சிவாஜியின் புகழ் அவரது 192வது பிறந்த நாளிலும் பேசப்பபடும். வாழ்க சிவாஜியின் புகழ்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
கமலை வைத்து தேவர்மகன் 2 இயக்குகிறேனா? : சேரன் விளக்கம்கமலை வைத்து தேவர்மகன் 2 இயக்குகிறேனா? ... சரோஜாதேவி, ராஜஸ்ரீக்கு சிவாஜி விருது சரோஜாதேவி, ராஜஸ்ரீக்கு சிவாஜி விருது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

oce - tokyo,ஜப்பான்
04 அக், 2019 - 18:11 Report Abuse
oce சிவாஜி ஜெமினி மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் மூவரும் சென்ற நூற்றாண்டின் திரைப்பட வரலாற்று நாயகர்கள். இந்த நூற்றாண்டில் இந்த மூவருக்கும் இணையாக எவரும் இல்லை.
Rate this:
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
02 அக், 2019 - 12:39 Report Abuse
M.COM.N.K.K. நடிகர் திலகம் செய்த ஒரே தவறு மக்கள் திலகத்துடன் சேராமல் இருந்ததுதான் மக்கள் திலகம் கட்சி ஆரம்பித்த பொழுதே அவர் அதிலே உறுப்பினராகி இருக்கவேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் கண்டிப்பாக அவர் தமிழக முதல்வரான இரண்டாவது நடிகர் என்ற பெருமையை பெற்றிருப்பார். அரசியலிலும் அவருக்கு கண்டிப்பாக வெற்றி கிடைத்திருக்கும்.மக்கள் திலகத்திற்கு பிறகு நடிகர் திலகம் கண்டிப்பாக முதல்வராகி இருப்பார்.அவர் உழைத்த கட்சி அவரை பழிவாங்கிவிட்டது .நடிகர் திலகம் எப்போதாவது கண்டிப்பாக இதை நினைத்து பார்த்திருப்பார்.மக்கள் திலகமும் நடிகர் திலகமும் ஒரே தாயிடம் உணவு உண்டவர்கள் தான்.உண்மையான கலைஞன் என்றால் அவன் நினைப்பது இதுதான்.என்போன்றவர்களுக்கு இருவரும் எனது இரு கண்கள் போன்றவர்கள்.அவர்கள் போல் நடிகர்கள் இனி உலகில் கண்டிப்பாக கிடையாது.இருவரின் புகழ் இந்த உலகம் இருக்கும்வரை இருக்கும்.
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
02 அக், 2019 - 08:58 Report Abuse
S Bala ஒரே நேரம் ஒன்பது படங்களில் நடிப்பதும் அதில் ஒன்றில் ஒன்பது வேடம் தாங்குவதும் எந்த முன்னோடியும் இல்லாத காலத்தில் எப்படிப்பட்ட சாதனை என்பது நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம். அதிலும் வண்ணம், மாயாஜாலங்கள், கேமரா வித்தைகள், எதுவும் இல்லாத காலத்தில் சினிமா பற்றிய நுணுக்கங்கள் அறியாத மக்களை மூன்று மணி நேரம் (இரண்டு அல்ல) உட்கார்ந்து படம் பார்க்க வைத்து அவர் அழும் போது அழுகை வருமாறு நடிப்பது என்பது அதைவிட அதிசயம்.
Rate this:
thulakol - coimbatore,இந்தியா
01 அக், 2019 - 21:19 Report Abuse
thulakol நல்ல மனிதர்
Rate this:
vns - Delhi,இந்தியா
01 அக், 2019 - 20:51 Report Abuse
vns சிவாஜி புகழ் எப்பேதும் மங்காது
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in