ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி | இந்தியாவில் அதிக பிரபலமான நடிகைகள் : டாப் 10ல் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் | இந்தியாவின் அதிக பிரபல நடிகர் : நம்பர் 1 விஜய், நம்பர் 6 அஜித்குமார் | ஜுன் 9ல் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 66 கோடி வசூலித்ததாக அறிவிப்பு | அதிதி ஷங்கரைப் பாராட்டிய எஸ்ஜே சூர்யா | 10 கதாநாயகிகள் கலந்து கொள்ளும் 'லெஜன்ட்' இசை வெளியீட்டு விழா | விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து 2005ம் ஆண்டு வெளிவந்த 'கஜினி' படம் தெலுங்கில் டப்பிங் ஆகி அங்கு பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்றது. அதன் பின் பல சூர்யா படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வந்தன. ஆனால், 'கஜினி' படம் பெற்ற வெற்றி அளவுக்கு சூர்யாவுக்கு அடுத்தடுத்த வெற்றிகள் அமையவில்லை.
20 கோடி வரையில் இருந்த சூர்யாவின் தெலுங்குப் பட வியாபாரம் படிப்படியாகக் குறைந்து தற்போது 'காப்பான்' படத்தில் 2 கோடி மட்டுமே ஷேர் என்று அளவிற்கு இறங்கு முகமாகிவிட்டது. சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த 'காப்பான்' படம் தெலுங்கில் 9 கோடி அளவிற்கு விற்கப்பட்டது. ஆனால், படத்தின் ஷேர் 2 கோடி வரையில்தான் இருந்திருக்கிறது. 7 கோடிக்கும் அதிகமாக அந்தப் படம் நஷ்டத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம் தமிழில் 'காப்பான்' படம் அதிக நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் என்கிறார்கள். இது சூர்யாவின் இதற்கு முந்தைய சில படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை விடக் குறைவுதானாம்.