Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிப்புக்கு கண்கள் போதும்: சாயிஷா

30 செப், 2019 - 16:31 IST
எழுத்தின் அளவு:
Eye-will-enough-to-acting-says-sayesha-saigal

"சினிமாவில் நடிப்பதற்கு கண்கள் மட்டும் போதும், இரு கண்களில் எத்தகைய உணர்வுகளை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்' என்று நடிகை சாயிஷா தெரிவித்துள்ளார்.

தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் படங்களில் நடித்துள்ள சாயிஷா, நடிகர் ஆர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டு, தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டி:

நடிகர் அஜய்தேவ் கானுடன் நடித்த, சிவாய் படம் வெற்றி பெற்றதால், அதிக பட வாய்ப்புகள் வருகின்றன. 'காப்பான்' படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பது வரை உயர்ந்து இருக்கிறேன். தொடர்ந்து நடிப்பைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் நடிப்பதற்கு, கண்கள் மட்டும் போதும். இரு கண்களில் எத்தகைய உணர்வுகளை வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்கு பாஷையே தேவை இல்லை.

நான் சினிமா குடும்ப பின்னணியில் வந்தவள். இருந்தாலும், வீட்டில் சினிமா பற்றி பேசுவது குறைவுதான். குடும்பத்தில் எல்லோருக்கும் பயணம் செய்வது பிடிக்கும். தென்னிந்திய பட உலகம் தொழில்நுட்பத்தில் உயர்ந்து இருக்கிறது. காப்பான் படத்தில் நடித்தபோது அதை உணர்ந்தேன்.

நடிகர் சூர்யாவுடன் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அது நடந்தது. அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள், எதிர்காலத்துக்கு எனக்கு உதவும். பழைய படங்களையும் இப்போது ரீமேக் செய்கின்றனர். அந்த வகையில், 'ராம் லக்கன்' இந்தி படத்தை ரீமேக் செய்தால், அதில் மாதுரி தீட்சித் நடித்த ராதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது. நடனத்துக்கு நிறைய வாய்ப்பு இருக்கும் படம். நான், பயிற்சி பெற்ற நடன கலைஞர். முழு நடன திறமையையும் வெளிபடுத்தும் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். அப்படியொரு படத்துக்காகவும் காத்திருக்கிறேன்.

இவ்வாறு சாயிஷா கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சென்னை திரும்பினார் விஜய்சென்னை திரும்பினார் விஜய் வெளியே வந்ததும் காதலியை சந்தித்த தர்ஷன் வெளியே வந்ததும் காதலியை சந்தித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in