ஒரு வருட நிறைவில் 'விக்ரம்' : தடம் பதித்த தரமான படம் | இசைக் கலைஞர்கள் சங்க கட்டடம் புதுப்பிப்பு : பிறந்தநாளில் இளையராஜா அறிவிப்பு | போர் வீரனாக நடிக்கும் நிகில் | சொகுசு கார் விவகாரம் : ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதம் நிறுத்தி வைப்பு | இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா |
2007ல் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் சிறுதா என்ற படத்தில் அறிமுகமானவர் ராம் சரண். அவருடன் நேகா சர்மா, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்த அந்த முதல் படமே வெற்றி பெற்று ராம் சரணுக்கு தெலுங்கு சினிமாவில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதையடுத்து ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வெற்றி பெற்று கமர்சியல் ஹீரோவாக்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் ராமசரண், ரசிகர்களுக்கு அறிமுகமாகி செப்., 28 உடன் 12 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.
அதையடுத்து, தனது மனைவி உபசானா மற்றும் நடிகைகள் தமன்னா, ராச்சா ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த ராம்சரண், அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.