175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த காலத்தால் அழியாத வெற்றி காவியங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு மீண்டும் மறுவெளியீடு செய்யப்படுகின்றன. அவைகள் மீண்டும் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. சிவாஜி நடித்த வசந்தமாளிகை படம் சமீபத்தில் வெளியிடப்பட்டு 100 நாட்களை தாண்டியது.
இந்த வரிசையில் அடுத்து வருகிறது எம்.ஜி.ஆர் நடித்த மாட்டுக்கார வேலன். 1970ம் ஆண்டு வெளியான இந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ உள்பட பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார் ப.நீலகண்டன் இயக்கி இருந்தார்.
விவசாயத்தை உயிராக நேசிக்கும் எம்.ஜி.ஆரின் தாய்மாமன் வி.கே.ராமசாமி. நகரத்தில் நாகரீகமாக வாழும் அவர், எம்.ஜி.ஆரை மதிக்காமல் அவருக்கு தன் மகள் ஜெயலலிதாவை திருமணம் செய்து வைக்க மறுத்து அவமானப்படுத்தி விடுவார். அவருக்கு விவசாயத்தின் அருமையை புரிய வைத்து அவர் மகளை எப்படி திருமணம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. 39 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளிவருது. சாய் வெங்கட்ராமா பிலிம்ஸ் வெளியிடுகிறது.