வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' |
கடந்த சில நாட்களுக்கு முன்பு லைக்கா நிறுவனம் தங்களுடன் பணியாற்றிய ஐங்கரன் நிறுவனத்தின் தலைவர் கருணாமூர்த்தி மீது 180 கோடி ரூபாய் புகார் கூறியது. இதற்கு பதில் அளித்து ஐங்கரன் கருணாமூர்த்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:
லைக்கா நிறுவனம் இந்தியாவில் லாபகரமாக தொழில் செய்ய 32 வருட அனுவபம் வாய்ந்த நான் தேவைப்பட்டேன். லைகாவுக்கு தோள் கொடுத்து அதனை ஒரு திரைப்பட நிறுவனமாக வளர்த்தேன். ஆனால் ஆயிரம் ரூபாய்கூட நான் செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் இன்றி இருந்தேன். எனவே எந்த பணபட்டுவாடாவுக்கும் நான் பொறுப்பல்ல. எல்லா படங்களும் லைக்கா தலைவர் சுபாஷ்கரன் மேற்பார்வையிலேயே நடந்தது. இப்போது லாபத்தை அவர்கள் எடுத்துக் கொண்டு நஷ்டத்தை என் தலையில் கட்டப்பார்க்கிறார்கள்.
ஐங்கரன் நிறுவனம் எந்த படத்தையும் தயாரிக்க வேண்டாம். லைக்கா தயாரிப்புக்கு துணையாக இருந்தால் போதும் லாபத்தில் பங்கு தருகிறோம் என்றார்கள். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. அதனால் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவு செய்தேன்.
நான் சொகுசாக இருந்து பணத்தை செலவு செய்ததாக கூறுகிறார்கள். நான் மாதச் சம்பளக்காரன் அல்ல. தமிழில் 14 படங்களை தயாரித்திருக்கிறேன். 24 படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறேன். 2 ஆயிரம் படங்களை வெளிநாட்டில் வெளியிட்டிருக்கிறேன். லைக்கா நிறுவனத்தில் இணைவதற்கு முன்பே பிசினஸ் கிளாசில்தான் விமானத்தில் பயணம் செய்வேன். 5 நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவேன்.
லைக்கா நிறுவனம் கூறியுள்ள குற்றச்சாட்டின் நோக்கம் என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே. அதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன். இனியும் இது தொடர்ந்தால் லைக்கா நிறுவனம் பற்றிய பல விஷயங்களை பொதுவெளியில் பேச தள்ளப்பட்டு விடுவேன். என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கருணாகரன் தெரிவித்திருக்கிறார்.